இன்று வரை மீளா துயரத்தில் எஸ்ஜே சூர்யா.. சூப்பர் ஸ்டார் நண்பரால் கைவிட்டுப்போன படம்

இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா தற்போது படங்களில் வில்லனாக மிரட்டி வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில் டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். கடைசியாக சிம்புக்கு வில்லனாக மாநாடு படத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

மேலும் தற்போது எஸ் ஜே சூர்யாவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. ஆனாலும் இவர் மீள முடியாத துயரில் தவித்து வருகிறார். இதற்கு காரணம் அவரது கையை விட்டுப் போன மிகப் பெரிய படம் தான். அதுவும் சூப்பர் ஸ்டார் நண்பரால் அந்த வாய்ப்பு பறிபோய் உள்ளது.

அதாவது பாலிவுட்ல மிகப்பெரிய நடிகராக இருந்த ஒருவர் முதல் முறையாக தமிழ் சினிமாவில் கால் பதிக்க இருந்தார். அதுவும் எஸ் ஜே சூர்யாவின் படத்தில் நடிக்க இருந்தார். இதற்கான அறிவிப்பு வந்தும் சில காரணங்களினால் இந்த படம் தடைப்பட்டது.

அதாவது ஹிந்தியில் சூப்பர் ஹிட் படமான பிக் பி படத்தை தமிழில் உயர்ந்த மனிதன் என ரீமேக் செய்ய இருந்தனர். இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பல படங்களை இயக்கிய சுரேஷ் கண்ணன் தயாரிப்பதாக இருந்தது. மேலும் ரஜினிகாந்த் இந்த படத்தை தொடங்கி வைத்தார்.

சில நாட்கள் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் மற்றும் அமிதாப் பச்சன் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் இந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. மீண்டும் இப்படம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானாலும் தற்போது வரை அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதனால் தற்போது எஸ் ஜே சூர்யா பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் உடன் நடிக்கும் வாய்ப்பை இழந்ததால் தற்போது வரை இதை எண்ணி வருந்தி வருகிறாராம். இதெல்லாம் சூப்பர் ஸ்டாரின் நண்பர் சுரேஷ் கண்ணாவால் தான் என்ற வருத்தமும் அவருக்கு உள்ளது.