Ajith Kumar – Shah Rukh Khan: எப்போதுமே ஒரு வருடம் முடிவடையும் போது அந்த வருடத்திற்கான சிறந்த படங்கள், பாடல்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகள் என பட்டியல் வெளியாகும். அப்படி ஒரு நிறுவனம் இந்த வருடத்திற்கான அதிக பாப்புலரான 10 இந்திய நடிகர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் நடிகர் அஜித்குமார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி இருக்கிறார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் தளபதி விஜய் எப்படியோ அப்படித்தான் தெலுங்கு சினிமாவில் இவருக்கு இருக்கும் பெயரும் புகழும். மகேஷ்பாபுவை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். தற்போது இவரின் கைவசம் அடுத்தடுத்து ஒன்பது படங்கள் இருக்கின்றன.
எட்டாவது இடத்தில் தெலுங்கு உலகின் முன்னணி நடிகர் ராம்சரண் இருக்கிறார். இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் இருப்பது பாலிவுட் உலகின் ஜாம்பவானாக இருக்கும் சல்மான் கான் தான்.
அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் பட்டியலில் தளபதி விஜய் ஆறாவது இடத்தில் இருக்கிறார். விஜய்க்கு இந்த வருடம் வாரிசு படம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்ஷனை கொடுத்தது. மேலும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் லியோ படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. விஜய்யை தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் ஜூனியர் என்டிஆர் இருக்கிறார். இவர் நடித்த ஆர் ஆர் படம் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். புஷ்பா படம் இவரை இந்திய ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். அவரை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நடிகர் பிரபாஸ் இருக்கிறார். பிரபாஸுக்கு அடுத்து சலார் படம் ரிலீஸ் ஆக வெய்ட்டிங்கில் இருக்கிறது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கும் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அடுத்தடுத்து பதான் மற்றும் ஜவான் எனும் இரண்டு ஹிட் படங்களை இவர் கொடுத்து இருக்கிறார். இவரையும் தாண்டி முதலிடத்தில் இருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். துணிவு படத்திற்கு பிறகு அவருக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகர்களில் முதல் இடத்தில் இருக்கிறார்.