கேரியரின் உச்சத்தில் இருக்கும் 2 நடிகைகள்.. விஜய் சேதுபதிக்கே டஃப் கொடுக்கும் ஹீரோயின்ஸ்

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்திலேயே 50-க்கும் மேற்பட்ட படங்களை நடித்து விட்டார். இவரின் மிகப்பெரிய சாதனையாக ஒரு வருடத்தில் 12 படங்களில் நடித்துள்ளார். இதுவரை இவரை யாராலயும் டஃப் கொடுக்க முடியாது என்று இருந்தது. ஆனால் நாங்க இருக்கோம் என்று ரெண்டு பேரு கிளம்பி இருக்கிறார்கள். அதுவும் நடிகைகளாக டஃப் கொடுத்து வருகிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையில் ஒருவராக வளர்ந்து வருகிறார். இவரின் படங்கள் அனைத்திலும் இவருக்கு முக்கியமான கேரக்டரே தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடித்த படங்கள் எல்லாமே நல்ல வெற்றி படமாக அமைந்தது. இவர் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கச்சியாக நடித்திருந்தார். இதற்கு அப்புறம் இவருக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைக்காது என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

அதை முறியடிக்கும் வகையில் ஹீரோயினாக இப்பொழுது இவர் கையில் 8 படங்கள் உள்ளது. ஹீரோயினாக இப்பொழுது வெளிவர இருக்கும் படம் ரன் பேபி ரன் மற்றும் சொப்பன சுந்தரி. இப்படி தொடர்ச்சியாக பல படங்கள் நடித்து விஜய் சேதுபதிக்கு டஃப் கொடுத்து வருகிறார்

பிரியா பவானி சங்கர்: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையில் ஒருவர் பிரியா பவானி சங்கர். முதலில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான” கல்யாண முதல் காதல் வரை” சீரியலில் நடித்தவர். இந்த சீரியல் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. மேலும் இதன் மூலம் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த “மேயாத மான்” என்ற படத்தின் மூலம் தான் பிரியா பவனிசங்கர் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். அதன் பின் தனக்கான ஒரு கதை களத்தை தேர்வு செய்து வெற்றிகளை தக்க வைத்துக் கொண்டார். தற்போது இவர் கையில் ஆறு படங்களை வைத்து சுற்றி வருகிறார். அதில் இந்தியன் 2, அகிலன், மற்றும் ருத்ரன் தற்போது ரிலீசாக தயாராக உள்ளது.

இப்படி இவர்கள் இருவரும் சினிமா துறையில் உச்சத்தில் இருந்து வருகிறார்கள். இவர்கள் விஜய் சேதுபதிக்கு டஃப் கொடுக்கிற அளவுக்கு இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. இவர்களின் வெற்றியை பொறுத்திருந்து தான் பார்க்கணும்.