Top 6 Tamil Movie Opening Day Collection: தமிழ் திரைப்படங்களுக்கு சமீப காலமாகவே உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும்ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே வசூலில் பின்னி பெடல் எடுத்த டாப் 6 படங்களை பற்றிய விவரம் வெளிவந்துள்ளது. இதன் மூலம் உலக அளவிலான வசூலில் ரஜினி இமயம் போல் அசைக்க முடியாமல் நிற்கிறார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
6-வது இடத்தில் அஜித்தின் வலிமை படம் பிடித்துள்ளது, இந்த படம் முதல் நாளில் மட்டும் உலக அளவில் 37 கோடியை வசூலித்தது. 5-வது இடம் உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பில் வெளியான விக்ரம் படம் முதல் நாளில் 45 கோடியை வசூலித்ததால், அந்த படத்திற்கு கிடைத்திருக்கிறது.
மேலும் 4-வது இடம் தளபதி விஜய்யின் பீஸ்ட் படம் பெற்றுள்ளது. இந்த படம் ஓப்பனிங் டேவில் மட்டும் உலக அளவில் 55 கோடியை வசூலித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 3-வது இடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் நேற்று திரையரங்கில் ரிலீஸ் ஆன ஜெயிலர் படம் பிடித்துள்ளது.
தற்போது திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களால் திருவிழா போல் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கும் ஜெயிலர் படம் இந்திய அளவில் முதல் நாளில் மட்டும் 60 கோடியை வசூல் வேட்டையாடி இருக்கிறது. அதிலும் தமிழகத்தில் மட்டும் 23 கோடியை தட்டி தூக்கியது.
அதுமட்டுமல்ல 2-வது இடம் ரஜினியின் கபாலி படம் பெற்றுள்ளது. இந்த படம் 65 கோடியை முதல் நாளில் மட்டும் பாக்ஸ் ஆபீஸில் குவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக முதல் இடம் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான 2.O படம் பெற்றுள்ளது.
உலக அளவில் 10,000 ஸ்கிரீனிங் செய்யப்பட்ட இந்த படம் முதல் நாளில் மட்டும் 70 கோடியை தட்டி தூக்கியது. இவ்வாறு ஓப்பனிங் டேவில் அதிக வசூலை ஈட்டிய டாப் 6 படங்களில் முதல் மூன்று இடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் பிடித்து அவரை பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை நிரூபித்துள்ளது.