தமிழில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் பிரகாசமாக இருக்கும் தயாரிப்பு நிறுவனம் என்றால் அது சன் பிக்சர்ஸ் மட்டும்தான். அவர்களுக்கு மட்டுமே ஒரே நேரத்தில் பல முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரிக்கும் வல்லமை உள்ளது.
ஏற்கனவே ரஜினியை வைத்து அண்ணாத்த, விஜய்யை வைத்து தளபதி 65, சூர்யாவை வைத்து சூர்யா 40, தனுஷை வைத்து D44, விஜய் சேதுபதியை வைத்து பொன்ராம் இயக்கும் படம் என ஒரே நேரத்தில் பல பெரிய படங்களை தயாரித்து வருகின்றனர்.
இதில் சூர்யா படமும், விஜய் சேதுபதி படமும் முதலில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க ரஜினியின் அடுத்த படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ரஜினி, தேசிங்கு பெரியசாமி என்ற இளம் இயக்குனருடன் ஒரு படம் நடிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
மேலும் அந்த படத்தை யார் தயாரிப்பாளர்கள் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரங்களில் அளவுக்கதிகமாக எழுந்து வருகின்றன. அதற்கு காரணம் ரஜினிக்கு 100 கோடி சம்பளம் கொடுக்கும் அளவுக்கு எந்த தனி தயாரிப்பாளரும் இல்லையே என யோசிக்கிறார்களாம்.
நீங்க யோசிக்கவே வேண்டாம் என ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய படமொன்றில் ஒப்பந்தமாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது என அண்ணாத்த பட வட்டாரங்களிலேயே பேச்சுக்கள் அடிபட்டுள்ளன.
ஏற்கனவே ரஜினிக்கும் லைகா நிறுவனத்திற்கும் தர்பார் பட விவகாரத்தில் சிறிது பஞ்சாயத்து ஏற்பட்டதால் மீண்டும் லைகா நிறுவனத்துடன் சேர மாட்டார் என திட்டவட்டமாக கூறுகின்றனர். அதேபோல் ரஜினிக்கு 100 கோடி சம்பளம் கொடுத்து படம் எடுக்கும் அளவுக்கு வேறு எந்த தயாரிப்பு நிறுவனமும் இல்லை என்பதால் ரஜினியின் அடுத்த படம் சன் பிக்சர்ஸ் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
