புலியை பார்த்து சூடு போட்ட பூனை.. கெத்து காட்டும் நயன்தாரா, அதல பாதாளத்திற்குச் சென்ற த்ரிஷா

Trisha-Nayanthara: அழகு என்றாலே போட்டிதான். அதிலும் சினிமா துறையை பொருத்தவரையில் யார் நம்பர் ஒன் இடத்தை தக்க வைப்பது என்ற போட்டி காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் த்ரிஷா, நயன்தாரா மட்டும் விதிவிலக்கு அல்ல. பல வருடங்களாக இவர்கள் இருவரும் மல்லுக்கட்டி கொண்டு தான் இருக்கின்றனர்.

வெளியில் அதெல்லாம் இல்லை என்று கூறி வந்தாலும் நயன்தாரா கதையின் நாயகியாக வெற்றி பெற்றதை பார்த்து த்ரிஷாவும் அதே ரூட்டில் களம் இறங்கினார். ஆனால் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக மாறியது அவருடைய நிலைமை.

எப்படி என்றால் நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்த மாயா, அறம், கோலமாவு கோகிலா, மூக்குத்தி அம்மன், டோரா உள்ளிட்ட பல படங்கள் வரவேற்பு பெற்றதோடு வசூலிலும் நல்ல லாபம் பார்த்தது. அதனாலயே அவர் அடுத்தடுத்து லீட் ரோலில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

அதற்கேற்றார் போல் வாய்ப்புகளும் அவர் காலடியில் குவிய ஆரம்பித்தது. இப்படியாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற கெத்தை அடைந்த நயன்தாராவுடன் போட்டி போட நினைத்த திரிஷாவும் அதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். ஆனால் அதுவே அவருக்கு வினையாக முடிந்தது.

சோலோ ஹீரோயினாக அவர் நடித்த கர்ஜனை, நாயகி, மோகினி, பரமபதம், ராங்கி உள்ளிட்ட பல படங்கள் வந்த சுவடு தெரியாமல் போனது. அவ்வளவு ஏன் நேற்று வெளியான தி ரோடு படமும் பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை. இதிலிருந்தே த்ரிஷாவுக்கு இது போன்ற கதைகள் செட்டாகவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது.

அதனால் அவர் இது போன்ற வீண் முயற்சிகளை கைவிட்டு விட்டு தனக்கான கதைகளை தேர்ந்தெடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. அந்த வகையில் தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று நயன்தாராவுடன் போட்டி போட்ட த்ரிஷா தற்போது அதல பாதாளத்திற்கு சென்று விட்டார்.