குக் வித் கோமாளி பிரபலத்துடன் ஜோடி போடும் த்ரிஷா.. ஜானுமாவை ஆட்டிப்படைக்கும் கெட்ட நேரம்

நடிக்க வந்து பல வருடங்கள் கடந்த பிறகும் இன்னும் அதே இளமை மாறாமல் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் அஜீத், ரஜினி, விஜய் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் கடைசியாக பரமபதம் விளையாட்டு என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் திரிஷா தேர்ந்தெடுத்த ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் எதுவும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் அனைத்தும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அவரைப் பார்த்துதான் திரிஷாவும் இது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் நயன்தாராவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் த்ரிஷாவுக்கு கிடைக்கவில்லை. சமீபத்தில் அவர் நடித்த 96 திரைப்படத்தை தவிர மற்ற திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியது. இதனால் சில காலம் திரிஷா பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார்.

தற்போது இவர் பொன்னியின் செல்வன், சதுரங்க வேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து அவர் தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அருண் வசீகரன் இயக்கும் இந்த திரைப்படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருடன் இணைந்து சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில் ஹீரோவாக நடிக்கும் சந்தோஷ் பிரதாப் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்.

மேலும் இவர் ஆர்யாவின் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்திலும் நடித்து இருந்தார். அதைதொடர்ந்து இவர் தற்போது த்ரிஷாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட த்ரிஷாவுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று பரிதாபப்பட்டு வருகின்றனர்.