விடாமுயற்சி ரூட் கிளியராக இருந்தாலும் கோபத்தில் திரிஷா.. பழிக்கு பழி வாங்கிய குந்தவை

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு திரிஷாவுக்கு தமிழில் மார்க்கெட் உயர்ந்துள்ளது. அதன்படி விஜய்யின் லியோ படத்தில் நடித்த நிலையில் இப்போது தமிழில் எக்கச்சக்க படங்களில் கமிட்டாகி இருக்கிறார். ஒருபுறம் விடாமுயற்சி, மற்றொருபுறம் தங் லைஃப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பில் தொடர்ந்து சிக்கல் வந்து கொண்டிருந்தது. அதாவது தனுஷியாவில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்த நிலையில் வானிலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதோடு லால் சலாம் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு லைக்காவுக்கு கிடைக்கவில்லை.

இதனால் பண பிரச்சனையும் இருந்ததால் படப்பிடிப்பை சிறிது காலம் தள்ளிப் போட்டிருந்தனர். இந்நிலையில் இப்போது தங் லைஃப் படத்திற்காக செர்பியாவில் திரிஷா இருக்கிறார். இந்நிலையில் விடாமுயற்சி படக்குழு பிரச்சனை எல்லாம் முடித்துவிட்டு இப்போது படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறார்கள்.

Also Read : ரீ ரிலீஸ்ல் ரெண்டு வருடமா ஓடும் படம்.. மொத்த காதலையும் வெளிக்காட்டி கிரங்கடித்த திரிஷா

ஆனால் திரிஷா இப்போது விடாமுயற்சி படப்பிடிப்புக்கு வருவதற்கு மறுக்கிறாராம். ஏனென்றால் ஏற்கனவே தன்னுடைய கால்ஷீட்டை வீணடித்ததால் பழிக்கு பழிவாங்க இப்போது தங் லைஃப் சூட்டிங்கில் இருப்பதாக கூறியுள்ளார். ஆகையால் படப்பிடிப்பு இன்னும் தாமதமாக வாய்ப்பிருக்கிறது.

ஆகையால் தங் லைஃப் முடித்துவிட்டு தான் விடாமுயற்சி படப்பிடிப்புக்கு திரிஷா வர வாய்ப்பு இருக்கிறது. இதனால் விடாமுயற்சி படக்குழு திரிஷா இல்லாத காட்சிகளை தற்போது படப்பிடிப்பு நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனராம். தன்னுடைய கால்ஷீட்டை வீணடித்ததால் சரியான நேரத்தில் அவர்களுக்கு ரிவெஞ் கொடுத்துள்ளார் குந்தவை.

Also Read : திரிஷா, நயன்தாரா இடம் எனக்குத்தான்.. வனிதா ஊதும் மகுடிக்கு ஆடும் ஜோவிகாவின் வைரல் போட்டோஸ்