இந்தியன் 2 படத்தை நிறைவு செய்த பிறகு அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசன்- மணிரத்தினம் இணையும் படத்தில் யார் கதாநாயகி என்பது தான் இப்போது ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. தற்போது மணிரத்னம் பொன்னியின் செல்வனின் ப்ரோமோஷன் மற்றும் ரிலீஸ் போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார். அதே சமயத்தில் அவர் கமலை வைத்து அடுத்து இயக்கும் படத்திற்கான வேலைகளும் மறுபுறம் வேகம் எடுக்கிறது.
அந்த வகையில் மே 20ம் தேதி விக்ரம் படத்திற்கு வெறித்தனமாக ‘ஆரம்பிக்கலாங்களா!’ என்ற ஒரு டீசரை தயாரித்தது போல், இந்தப் படத்திற்கும் ஒரு டீசரை தயாரிக்கும் எண்ணத்தில் உள்ளனர். அதற்கான ஷூட்டிங் தான் மே 20 மற்றும் 21ம் தேதிகளில் நடத்த பிளான் போட்டுள்ளனர். மேலும் இந்த படம் ஆரம்பித்ததில் இருந்தே படத்திற்கு கதாநாயகி திரிஷா தான் என்ற பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருந்தது.
ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையை பார்க்கும் போது திரிஷா இல்லை நயன்தாரா தான் என்று சொல்லப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்ற உண்மையை அலசி ஆராயும் போது, கமலும் திரிஷாவும் இணைந்து நடித்த மன்மதன் அம்பு படத்தினை தயாரித்தது ரெட் ஜெயண்ட் மூவிஸ். அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
இப்போது அதே ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் மறுபடியும் கமல்- திரிஷா இருவரும் இணைந்தால், மீண்டும் ஊத்திக்குமோ என்ற பயம் தயாரிப்பு நிறுவனத்திற்கு எழுந்துள்ளது. திரிஷா ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு ராசி இல்லாத நடிகை என்று கருதுகின்றனர். அதனால் தான் அந்த ராசியில்லாத நடிகை மட்டும் வேண்டவே வேண்டாம் என்று மணிரத்னத்திடம் சொல்லிவிட்டனர்.
ஆனால் அப்ப இருந்த திரிஷா போல் இப்போது இல்லை, அவர் பொன்னியின் செல்வனில் குந்தவை கதாபாத்திரத்தில் அல்டிமேட் ஆக நடித்திருப்பார். அப்படிப்பட்ட பேரழகி மறுபடியும் கமலுடன் இணைந்தால் படம் நிச்சயம் இந்த முறை வெற்றி பெறும் என்று மணிரத்னம் அடித்து சொல்கிறார். ஆனால் ரெட் ஜெயண்ட் அதை கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்க தயாராக இல்லை.
படத்தின் மூலம் ரொம்பவே சென்டிமென்டாக இருக்கின்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் நயன்தாராவை மட்டும் கதாநாயகியாக நடிக்க வைத்தால் நாளைக்கே பிசினஸை ஆகிவிடும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். கூடிய விரைவில் இந்தப் படத்தைக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக போகிறது. அதில் யார் கதாநாயகி என்பது தெரிந்துவிடும். பொறுத்திருந்து பார்ப்போம்.