Kamal Indian 2: இப்போது தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தான் இந்தியன் 2. இப்படத்தின் முதல் பாகம் பல வருடங்களுக்கு முன் வெளியானாலும் தற்போதும் புது பொலிவுடன் இருக்கிறது. இதற்கு காரணம் ஷங்கரின் இயக்கம் என்று சொன்னால் மிகையாகாது. மேலும் கமல் இரட்டை வேடத்தில் பட்டையை கிளப்பி இருப்பார்.
இந்த சூழலில் கடந்த சில வருடங்களாகவே இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. இதற்காக கமல் பல மணி நேரம் மேக்கப் போடுகிறாராம். இந்நிலையில் இன்னும் 25 நாட்களில் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறைவு பெற இருக்கிறது. அதன் பிறகு படத்தில் சிஜி வேலைகள் தான் நிறைய இருக்கிறதாம்.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியன் 2 கிளைமாக்ஸ் காட்சியில் ட்விஸ்ட் உள்ளதாம். அதாவது இந்தியன் முதல் பாகத்திலேயே கடைசியில் விபத்துக்கு பிறகு இந்தியன் தாத்தா உயிருடன் இருப்பார். அதன் தொடர்ச்சியாக தான் தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
அதைவிட பல மடங்கு பயங்கரமாக இந்தியன் 2 கிளைமாக்ஸ் காட்சி பேசப்படுமாம். அதுமட்டுமின்றி இதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்தை எடுக்கவும் ஷங்கர் திட்டமிட்டு உள்ளார். சமீபத்தில் மாமன்னன் பிரமோஷன்காக உதயநிதி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்தியன் 3 உருவாக வாய்ப்பு இருக்கிறது என்பதை வெளிப்படையாகவே கூறினார்.
இந்த படத்தையும் உதயநிதியுடன் இணைந்து லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது. மேலும் இந்தியன் 2 படத்தைப் போல பல வருடங்கள் இழுத்தடிக்காமல் ஒன்று அல்லது இரண்டு வருடங்களிலேயே இந்தியன் 3 படம் எடுத்து முடிக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள். ஆனால் இந்தியன் 2 படத்தில் சித்தார்த் போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்தியன் படத்தில் சந்துரு போல இரண்டாம் பாகத்தில் சித்தார்த் ஒரு லஞ்சவாதியாக உள்ளாராம். அவரைப் போல அரசு அலுவலகங்களில் ஊடுருவி இருக்கும் லஞ்சவாதிகளை வேரறுக்க இந்தியன் தாத்தா வருவார் என்பதை உணர்த்தும் வகையில் இந்த படம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.