ஆளாளுக்கு சிம்புவின் அடுத்த படத்தை பற்றி ஒவ்வொரு அப்டேட் கொடுக்கிறார்கள். சிம்பு அடுத்த படத்திற்கு பெரிய தொகையை சம்பளமாக கேட்கிறார் அதனால் அவரது அடுத்த ப்ராஜெக்ட் இழுத்துக் கொண்டே போகிறது என்ற பேச்சுக்கள் அடிபட்டது. STR 49, 51என சிம்பு இரண்டு படங்களில் கமிட்டாகி இருந்தார்.
இதில் STR 49 படம் தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக இருந்தது. ஆரம்பத்தில் நிறைய தயாரிப்பாளர்கள் இந்த படத்தை தயாரிப்பதற்கு முன் வந்தனர், ஆனால் படத்தின் பட்ஜெட்டை கேட்ட பிறகு ஒவ்வொருத்தராக ஜகா வாங்கி விட்டனர். இந்த படத்திற்கு 100 முதல் 150 கோடிகள் பட்ஜெட் என இயக்குனர் தெரிவித்திருந்தார்
சிம்புவை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க யாரும் முன் வரவில்லை. அதன் பிறகு சிம்பு துபாய் சென்று தயாரிப்பாளர் கண்ணன் ரவி என்பவரை கூட பார்த்து வந்தார். அவரும் ஒத்துழைக்கவில்லை. இதனால் சிம்பு மற்றும் தேசிங்கு பெரியசாமி படம் ட்ராப்பானது.
இப்படி போய்க்கொண்டிருக்கையில் இயக்குனர் வெற்றிமாறன் சிம்புவை வைத்து படம் பண்ண போவதாக செய்திகள் வந்தது. அந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கவிருந்தார். ஆனால் இப்பொழுது அதற்கும் தடை ஏற்பட்டுள்ளது வெற்றிமாறனும் இந்த படத்திற்கு அதிக பட்ஜெட் நிர்ணயித்துள்ளார்.
சிம்பு 45 கோடிகள் சம்பளம் கேட்கிறார் என்பதெல்லாம் உண்மை இல்லையாம். இப்பொழுது சிம்புவை வைத்து பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பதற்கு எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை. வெற்றிமாறனும், தேசிங்கு பெரியசாமியும் இவ்வளவு பட்ஜெட்டில் படம் எடுத்தால்தான் நன்றாக இருக்கும் என போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.