கமல் இப்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அவர் திறமையாக நடத்தி வருகிறார். கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் அவ்வளவாக கவனம் செலுத்தாமல் இருந்த ஆண்டவர் தற்போது முழுமூச்சாக களம் இறங்கியுள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு கமல்ஹாசனின் புது பட அறிவிப்பு வெளியாகப் போவதாக ஒரு அறிவிப்பு வெளியானது.
அந்த வகையில் ஆண்டவரின் அடுத்த அதிரடி என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ரொம்பவும் ஆவலுடன் காத்திருந்தனர். இன்று காலை முதலே ட்விட்டர் தளம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்கள் அனைத்தும் பரபரப்பாகவே காணப்பட்டது. அது மட்டுமல்லாமல் கமல்ஹாசன் நாளை அதாவது நவம்பர் 7ஆம் தேதி தன்னுடைய 68 ஆவது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட இருக்கிறார்.
அதற்காக சோசியல் மீடியாவில் இப்பவே ரசிகர்கள் வாழ்த்துக்களை கூற ஆரம்பித்து விட்டனர். மேலும் திரை பிரபலங்களும் கமல்ஹாசனின் நெருங்கிய நட்பு வட்டாரங்களும் அவருடைய பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இப்படி அனைவரும் ஆண்டவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருக்க தற்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது 35 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் இருவரும் மீண்டும் இணைய இருக்கின்றனர். இந்த அறிவிப்பை உதயநிதி ஸ்டாலின் தற்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கமலின் 234 ஆவது திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கின்றது. ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 2024 ஆம் ஆண்டு இப்படம் திரையரங்குக்கு வர இருக்கும் அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
மேலும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தின் உரிமையை பெற்றுள்ளது. இதற்கான அறிவிப்பு தான் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உண்மையிலேயே யாரும் எதிர்பார்க்காத இந்த அறிவிப்பு கமல்ஹாசனின் பிறந்தநாள் சர்ப்ரைஸாக ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது. தற்போது இந்த விஷயம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி கொண்டு இருக்கிறது.