இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், பஹத் பாசில்,விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோரின் நடிப்பில் இந்த வருடம் பிளாக்பஸ்டர் திரைப்படமாக வெளியான விக்ரம் திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி வசூலை அள்ளிக் குவித்துள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் விக்ரம் திரைப்படத்தின் திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை வாங்கியது. இதனிடையே விக்ரம் திரைப்படம் 75 நாட்களுக்கு மேலாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி பல கோடி வசூலை பெற்று வந்தது.
இந்த நிலையில், கமலஹாசனுக்கு சேர வேண்டிய லாபத்தை உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே கொடுத்திருந்தார். ஆனால் தற்போது விக்ரம் படத்தின் லாபம் மீண்டும் சில திரையரங்குகளில் ஓடி அதிகரித்துள்ளது. இந்த லாபத்தையும் உதயநிதி ஸ்டாலின் கமலஹாசனிடம் வந்து கொடுத்துள்ளார்
உதயநிதி ஸ்டாலின் நினைத்திருந்தால் கமலஹாசனுக்கு இந்த லாபத்தைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பண விஷயத்தில் எதையும் மறைக்காமல் உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டுள்ளார். உடனே கமலஹாசனும், உதயநிதி ஸ்டாலின் கொடுத்த இரண்டரை கோடி ரூபாய் லாபத்தை விக்ரம் படத்தில் நடித்த நடிகர்களுக்கும் கமலஹாசனின் அலுவலகத்தில் வேலை புரியும் நபர்களுக்கும் பங்கு போட்டு கொடுக்குமாறு உதயநிதி ஸ்டாலினிடம் பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்..
மேலும் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் காரணமாக அண்மைக்காலமாக உதயநிதி ஸ்டாலினுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு உள்ளது.
ஒருவேளை இது அரசியல் சூட்சமமாக இருக்குமோ என பலரது விமர்சனங்களாக உள்ளது தற்போது உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக உள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுகள் கழித்து வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தி.மு.க இணைந்து கூட்டணியில் தேர்தலில் நிற்பதற்கான சூழலை உருவாக்குவது போலவும் உள்ளது.