Movie Maamannan: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படம் இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படம் தான் தன்னுடைய கடைசி படம் என உதய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இருந்தாலும் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் மீண்டும் நடிப்பேன் என்று தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தான் பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே மாரி செல்வராஜின் படங்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டு. இதற்கு காரணம் அவருடைய முந்தைய படங்கள் ஆன கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் தான். தற்போது உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் திரைப்படத்தின் மீதும் அதிக அளவில் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும், வேறொரு பிரச்சனை உதயநிதிக்கு தலைவலியாக தற்போது அமைந்திருக்கிறது.
உதய்யின் சினிமா கேரியரில் வெற்றி படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம். ஒரு கல் ஒரு கண்ணாடி, மனிதன், சைக்கோ போன்ற படங்கள்தான் வசூலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மற்ற படங்கள் எல்லாமே ஓரளவுக்கு ஆவரேஜ் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். இதிலும் ஒரு சில படங்கள் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாமல் திணறியும் இருக்கின்றன.
அந்த வரிசையில் வெளிவந்த படம் தான் கலகத்தலைவன். இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். கார்ப்பரேட் நிறுவனம், அரசியல் மாபியா என படம் பரபரப்பாக சென்றாலும் வசூல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கிய லண்டன் கருணாவிற்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தின் தாக்கம் தற்போது மாமன்னன் வரை உதயநிதியை தொடர்ந்து வருகிறது.
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, மாரி செல்வராஜ் என வெற்றி கூட்டணியாக அமைந்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் வியாபாரத்தை மிகப்பெரிய அளவில் பேசி முடிக்க உதயநிதி திட்டமிட்டு வருகிறார். ஆனால் முந்தைய படத்தின் நஷ்டத்தால் இந்த படத்தை அதிக பணம் கொடுத்து வாங்க விநியோகஸ்தர்கள் தயங்குகிறார்கள். இது உதயநிதிக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே மாமன்னன் இசை வெளியீட்டு விழாவின்போது இயக்குனர் மாரி செல்வராஜ் தேவர் மகன் திரைப்படத்தில் வந்த வடிவேலுவின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதை தான் மாமன்னன் என்று படத்தின் மீது பெரிய ஹைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார். ஆனால் உதயநிதியின் கலகத்தலைவன் திரைப்படத்தால் தற்போது எந்த படத்தில் வியாபாரம் அந்தரத்தில் தொங்கும் நிலைமையாக இருக்கிறது.