Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் தற்போது இருக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவராக அவருக்கான இடத்தை கெட்டியாக பிடித்து விட்டார். இதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களையும் கண்ணும் கருத்துமாக நடித்து வெற்றியை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த படங்களிலே கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் படம் மட்டும் கொஞ்சம் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை.
அதனால் விட்டஇடத்தை பிடிப்பதற்காக மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் படத்தை முழுவதுமாக நம்பி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு பிரமோஷனுக்காக மலேசியா மற்றும் துபாய் இன்னும் இது போன்ற பல நாடுகளுக்கு போவதற்கு படக்குழு முடிவெடுத்து இருக்கிறது.
அதன்படி முதலில் மலேசியாவிற்கு சிவகார்த்திகேயன் சென்றிருக்கிறார். ஆனால் சரியான முறைப்படி திட்டமிடாததால் அவர் அங்கே இறங்கியதும் இவரை அழைத்துப் போவதற்கு ஒருவர் கூட வரவில்லையாம். இதனால் ரொம்பவே கடுப்பாகி சாதாரண மனிதனைப் போல கால் டாக்ஸி பிடித்து சென்றுள்ளார்.
இதனை அடுத்து பிரமோஷன் மேடையில் பேச வேண்டும் என்றால் அதற்காக தனி விசா எடுத்திருக்க வேண்டும். ஆனால் இவருக்கு போட்டது சாதாரண விசிட்டர் விசா. இந்த விசாவில் இவர் சென்றதால் அங்க போய் மேடையில் பேச முடியாது. இது தெரியாமல் பேச ஆரம்பித்ததால் அங்கே இவரை சுற்றி 30 பேர் கொண்ட போலீஸ் படை எடுத்து சூழ்ந்திருக்கிறார்கள்.
அத்துடன் மேடையில் பேசவிடாமல் சிவகார்த்திகேயனை தடுத்து மிரட்டி இருக்கிறார்கள். இது என்னடா இவருக்கு வந்த சோதனை என்று வேறு வழியில்லாமல் அங்கு ஒரு பிரஸ்மீட்டை ஏற்பாடு செய்து அங்கு நடந்த அனைத்தையும் கூறி இருக்கிறார். இதுவரை எந்த ஹீரோவுக்கும் இந்த மாதிரி ஒரு அவமான செயல் நடந்ததே இல்லை.
ஆனால் சிவகார்த்திகேயன் இவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தும் வெளிநாடு சென்று அவமானப்பட்டு இருக்கிறார். இதற்கு அடுத்து இன்னும் துபாய் வேற செல்ல இருக்கிறார். அங்க என்ன எல்லாம் நடக்கப்போகிறதோ என்று தெரியவில்லை. இருந்தாலும் இதில் சில விஷயங்களை தெரிந்து கொண்டிருப்பார். இனிமேல் ஒவ்வொரு விஷயத்தையும் சூதானமாக செய்து வருவார்.