போட்டிக்கு நாங்களும் வரலாமா.? சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் போல் ஆரம்பித்த உலக நாயகன் பஞ்சாயத்து

Kamal-Rajini: அண்மை காலமாகவே சூப்பர் ஸ்டார் பட்டம் பெரும் விவாதத்திற்கு ஆளாகி வருகிறது. அதிலும் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பலரும் கூறியதை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாடல் வரை இந்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் அது அனைத்திற்கும் முடிவு கட்டும் வகையில் சமீபத்தில் நடந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சூப்பர் ஸ்டார் பட்டம் எப்படி வந்தது என்பது குறித்து பேசி இருந்தார். அது மட்டுமின்றி விஜய்யின் பீஸ்ட் படம் பற்றியும் பேசி ஆச்சரியப்படுத்தினார். இதன் மூலம் அவர் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தி இருந்தார்.

இப்படி ஒரு வழியாக சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தை அவரே முடித்து வைத்தார். இது ஒரு புறம் இருக்க தற்போது உலகநாயகன் டைட்டில் பற்றிய விவாதங்களும் சோசியல் மீடியாவில் காட்டு தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது. இதனால் கொந்தளித்த கமல் ரசிகர்கள் ஒரே ஒரு உலக நாயகன் மட்டும் தான். அந்த பட்டத்திற்கு எந்த போட்டியும் கிடையாது என்று கூறி வருகின்றனர்.

மேலும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்க தான் போட்டி நடக்கும் என்று கூறி கமல் உலக நாயகன் பட்டம் குறித்து பேசி இருந்த பழைய வீடியோ ஒன்றையும் வைரல் செய்து வருகின்றனர். அதில் கமல் உலகநாயகன் பட்டம் என்பது ரசிகர்களின் சந்தோஷம். ஆனால் என்னை ஒரு நல்ல நடிகன் என்று சொன்னால் தான் நான் சந்தோஷப்படுவேன்.

இந்த பட்டங்கள் எல்லாம் காற்றோடு கரைந்து போய்விடும். என்னை சந்திக்கும் தாய்மார்கள் அன்போடு விபூதியை நெற்றியில் வைத்தால் நான் தடுக்க மாட்டேன். அப்பொழுது பகுத்தறிவு பேசமாட்டேன், அவர்களின் அன்புக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அப்படித்தான் இந்த பட்டமும் என கூறியிருக்கிறார்.

இந்த வீடியோவை வெளியிட்டு வரும் ரசிகர்கள் கமல் இது போன்ற பட்டங்களுக்கு ஆசைப்படுவது கிடையாது, அதுதான் எங்கள் ஆண்டவர் என பெருமைப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் சூப்பர் ஸ்டாரை போல் உலக நாயகன் டைட்டிலையும் பிரச்சனையாகி போட்டியை உருவாக்கலாம் என இருந்த சிலருக்கு பதிலடி கிடைத்திருக்கிறது.