தளபதி விஜய் ‘மாஸ்டர்’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் பொங்கலன்று ரிலீஸ் ஆகும் என கடந்த தீபாவளியின் போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த அஜித்தின் துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் திரையிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. படம் பொங்கலன்று ரிலீஸ் ஆகும் என ரிலீஸ் தேதியும் உறுதியாகிவிட்டது . கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு அஜித் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது மட்டுமின்றி அதே 8 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்துடன் மோதுகிறது.
இப்போது உதயநிதி தன்னுடைய அரசியல் பலத்தை உபயோகப்படுத்தி துணிவுக்கு நிறைய தியேட்டர்களை வாங்கி வருவதாக அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகின. மேலும் விஜயின் வாரிசு திரைப்படத்தை தில் ராஜுவின் வெங்கடேஸ்வரா நிறுவனமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதால் அவர்களால் தமிழ்நாட்டில் உதயநிதியை மீறி வியாபாரத்தில் காய் நகர்த்த முடியவில்லை.
கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் சினிமாவில் எல்லா படங்களையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் ரிலீஸ் செய்து வருகிறது. என்ன தான் அரசியல் பின்புலம் இல்லை நாங்கள் சினிமாவை வாழவைக்கிறோம் என்று சொல்லிக் கொண்டாலும் உதயநிதியின் பக்கா பிளான் வாரிசு படத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது.
சமீபத்தில் கழகத்தலைவன் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் போது பேசிய உதயநிதி, வாரிசு படத்தின் சில ஏரியா உரிமையை வாங்கும் முயற்சியில் இறங்கி இருப்பதை மறைமுகமாக கூறியுள்ளார். அதாவது வாரிசு படமும், துணிவு படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதி எனவும், வாரிசு படத்தின் சில ஏரியா உரிமை கிடைத்துவிட்டால் இரண்டு படங்களுக்கும் சரிசமமாக தியேட்டர்கள் கிடைத்துவிடும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே தெலுங்கு இண்டஸ்ட்ரி, பொங்கல் தினத்தன்று தெலுங்கு படங்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எடுத்த முடிவில் வாரிசு ரிலீஸ் அங்கே தள்ளாட்டம் கண்டுவிட்டது. இந்நிலையில் ஏற்கனவே உதயநிதிக்கும், தளபதி விஜய்க்கும் குருவி படத்தின் போதே விரிசல் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் சமயம் பார்த்து உதயநிதி விஜயை லாக் செய்துவிட்டார் என்பது அப்பட்டமாக தெரிகிறது. உதய்யிடம் சரண்டர் ஆவதை தவிர வாரிசு படக்குழுவுக்கு வேறு வழியில்லை என்பது போல் தெரிகிறது.