உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் கதாநாயகனாக வருவதற்கு முன்பு ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இவருடைய இந்த நிறுவனம் பல டாப் ஹீரோக்களின் படங்களை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்து இருக்கிறது. இந்த வருடத்தின் நிறைய வெற்றி படங்கள் ரெட் ஜெயண்டின் ரிலீஸ்கள் தான்.
உதயநிதி சினிமா ஆகட்டும் அல்லது அரசியலாக இருக்கட்டும் எப்பவுமே வெளிப்படையாக உண்மையை பேசக்கூடியவர். இவருடைய இந்த வெளிப்படையான பேச்சுக்கள் சமீப காலமாக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. ஆனால் இதே பேச்சு இவருக்கு சில நேரங்களில் தர்ம சங்கடமான சூழ்நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
உதயநிதிக்கு சினிமாவுக்குள் வருவதற்கு முன்பே பல திரை பிரபலங்கள் நண்பர்களாக இருக்கின்றனர். இதில் விஷால் மற்றும் ஆர்யா போன்றவர்களும் உண்டு. சமீபத்திய விகடன் பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் நடிகர் ஆர்யாவை பற்றி ஒரு உண்மையை பகிரங்கமாக போட்டுடைத்துள்ளார். இது ஆர்யாவுக்கே கொஞ்சம் தர்மசங்கடமாக தான் இருக்கும்.
சமீபத்தில் ஆர்யா, சக்தி சௌந்தர்ராஜனுடன் இணைந்து கேப்டன் என்னும் திரைப்படத்தை தயாரித்து, நடித்திருந்தார். ஹாலிவுட் படம் போல் எடுக்க நினைத்து மொத்தமும் சொதப்பலாக வந்தது இந்த படம். ஆர்யா தான் தயாரித்த இந்த படத்தை, படம் நன்றாக வந்து இருக்கிறது, சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிடும் என்று சொல்லிவிட்டாராம்.
உதயநிதியும் நண்பனை நம்பி படத்தை பார்க்காமலேயே விநியோகம் செய்ய ஒத்துக்கொண்டாராம். எல்லோரிடமும் படம் சூப்பராக இருக்கிறது என்று சொல்லி மாஸ் காட்டி விட்டாராம். ஆனால் படத்தின் முதல் காட்சியை பார்த்தவர்கள் உதயநிதி ஸ்டாலினை பகிரங்கமாய் கலாய்த்து விட்டார்களாம். உதயும் ஆர்யாவை நம்பி அசிங்கப்பட்டதை வெளிப்படையாக சொல்லிவிட்டார்.
ஆனால் இப்படி ஒரு பேட்டியை அவருடைய நண்பர் ஆர்யாவும், அந்த படத்தின் இயக்குனரும் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. எது எப்படியோ ஏதாவது ஒரு விழாவில் உதயநிதி ஸ்டாலின் மைக்கை கையில் எடுத்தாலே சினிமாவின் பல ரகசியங்கள் வெளி வருகின்றனர். இவருடைய இந்த பேச்சு நிறைய டாப் ஹீரோக்களை கூட பாதிக்கிறது.