Kamal-Vadivelu: இந்தியன் 2 படப்பிடிப்பு முடிவுக்கு வந்த நிலையில், கமல் தன் அடுத்த கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் இவர் தயாரிப்பில் பல படங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வடிவேலுக்கு தன் படத்தில் வாய்ப்பு கொடுக்கப் போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் வடிவேலு, உதயநிதி நடிப்பில் வெளியாகி பரபரப்பை கூட்டிய படம் தான் மாமன்னன். இப்படத்தில் அரசியல்வாதியாக வடிவேலு தன் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். இதுவரை நகைச்சுவையாகவே பார்த்துக் கொண்டிருந்த இவரின் நடிப்பை இப்படத்தில் சீரியஸான கதாபாத்திரம் ஏற்று அசத்திருப்பார்.
இவரின் நடிப்பு குறித்த மக்களிடையே நல்ல விமர்சனங்களும் வெளியாகி வருகிறது. இதனைக் கவனித்த கமல், வடிவேலுவை வைத்து ஒரு அழுத்தமான அரசியல் கதையை உருவாக்க திட்டம் தீட்டு உள்ளாராம். தற்பொழுது நகைச்சுவையில் ரீ என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர் வேறு பரிமாணங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.
அதைப் பொருட்டு இவரை வைத்து கதை இயக்குவாரோ அல்லது இவரை வைத்து தயாரிப்பாரோ என தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக கமல் இவரை வைத்து படம் எடுப்பது உறுதி ஆகிவிட்டது. வடிவேலு இதுபோன்ற சீரியஸ் கதாபாத்திரம் ஏற்று நடித்த படம் தான் தேவர் மகன்.
இப்படம் வெளிவந்து 30 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் வடிவேலு இப்படத்திற்குப் பிறகு, தன்னை நகைச்சுவை நடிகராகவே நிரூபித்து வந்தார். தற்பொழுது புது அவதாரம் எடுத்துள்ள வடிவேலுக்கு வாய்ப்பு கொடுக்க முன்வந்துள்ளார் கமல். மேலும் இவர்கள் இருவரின் கூட்டணியில் இத்தனை வருட காலத்திற்கு பிறகு கைகோர்க்கப் போகிறார்கள் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை முன் வைத்து வருகிறது.
இது ஒரு புறம் இருப்பின், வடிவேலு கமல் படத்தை ஏற்று நடித்துவிட்டால், அதன் பின் இவர் குணச்சித்திர நடிகராகவே மாறிவிடுவார். மேலும் இவரின் மார்க்கெட்டும் கிடு கிடுவென உயர்ந்துவிடும் என்பது உறுதியான ஒன்று. இது போன்ற நிகழ்வுகள் நடக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் பேசி வருகிறது.