Actor Rajini: ஜெயிலர் இந்த அளவுக்கு இண்டஸ்ட்ரியல் ஹிட் அடிப்பதற்கு சூப்பர் ஸ்டார் முக்கிய காரணம் என்றால் அவருக்கு நிகராக இருந்த வில்லன் கதாபாத்திரமும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. அப்படிப்பட்ட மிரட்டலான வர்மன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் விநாயகன்.
தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த கேரக்டர் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. அதிலும் படத்தில் கொடூர வில்லத்தனத்தை காட்டிய இவரை பார்த்து கொஞ்சம் மிரட்சியாக இருந்தாலும் அட செம ஆக்டிங்பா என்று நாம் சொல்லும் அளவுக்கு இருந்தது அவருடைய நடிப்பு. அதனாலேயே அவர் இப்போது தமிழ் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார்.
அப்படிப்பட்ட விநாயகன் ஜெயிலர் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக தன் முகத்தை வெளி உலகத்திற்கு காட்டியிருக்கிறார். அது குறித்த வீடியோவை தற்போது சன் பிக்சர்ஸ் பெருமையாக வெளியிட்டுள்ளது. அதில் அவர் தனக்கு எப்படி இந்த பட வாய்ப்பு கிடைத்தது என்பதை தன்னுடைய ஸ்டைலில் மலையாள வாடை வீசும் தமிழில் பேசி இருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, என் மேனேஜர் தான் இப்படி ஒரு வாய்ப்பு வந்ததை பற்றி என்னிடம் கூறினார். ரஜினி சார் படம், அதுவும் சன் பிக்சர்ஸ் என்றால் சொல்லவா வேண்டும் உடனே நான் ஒப்புக்கொண்டேன். அதன் பிறகு நெல்சன் எனக்கு வர்மன் கேரக்டரை விளக்கினார். இப்படித்தான் எனக்கு ஜெயிலர் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் ரஜினியுடன் நடித்தது நான் செய்த பாக்கியம்.
இதை நான் சொப்பனத்தில் கூட யோசிக்கல சாரே என்று அவர் முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் வர்மன் கதாபாத்திரம் தனக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்து விட்டதாகவும் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத அளவுக்கு பிரபலமாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை வைத்துப் பார்க்கும்போது விநாயகன் ரஜினியால் தல காட்ட முடியாத அளவுக்கு உலக அளவில் அடையாளம் காணப்பட்ட நடிகராக மாறி இருக்கிறார் என தெரிகிறது. அந்த மகிழ்ச்சியில் அவர் நெல்சன் உனக்கு ரொம்ப நன்றிப்பா என்று கூறியிருக்கும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.