இப்பவும் ஜோடியாக சுற்றும் வருண், அக்சரா.. எதுல போய் முடிய போகுதோ தெரியல

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சீசன்களை விட இந்த சீசன் பல எதிர்பாராத சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதன் விளைவாக ரசிகர்கள் இந்த சீசனுக்கு அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போது அவ்வளவு பிரபலம் இல்லாமல் இருந்த போட்டியாளர்களுக்கு தற்போது ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அப்படி ஏராளமான ரசிகர்களை கொண்ட போட்டியாளர்கள் தான் வருண் மற்றும் அக்ஷரா.

இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டு ஒன்றாக வீட்டை விட்டு வெளியேறினார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பொழுது அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இது பார்க்கும் ரசிகர்களுக்கு மெல்லிய காதலாகவும் தெரிந்தது.

varun-akshara
varun-akshara

அதற்கு ஏற்றார் போல் பிக்பாஸ் வீட்டில் நடந்த நாமினேஷன் போது போட்டியாளர்கள் யாராவது ஒருவரை காப்பாற்றலாம் என்ற அறிவிப்பு வந்தது. அப்போது அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயற்சி செய்தனர். அதன் விளைவாக இருவரும் ஒன்றாக எலிமினேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் இருவரும் தற்போது சுதந்திரப் பறவைகளாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று அனைவரும் கருதிய நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக வருண் தன்னுடைய சோஷியல் மீடியாவில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார்.

அதில் வருண், அக்ஷராவின் பெயரை தன் பெயருடன் இணைத்து வருக்ஷரா என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு சேர்த்து ஒரு ஹார்ட்டையும் போட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் உங்க ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு என்று அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

varun
varun