Venkat Prabhu : வெங்கட் பிரபு தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்த நிலையில் விஜய் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அவ்வாறு உருவான கோட் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் லாபத்தை கொடுத்தது.
ஆனால் தோல்வி படங்கள் கொடுத்த போது கூட வெங்கட் பிரபுவுக்கு வாய்ப்பு வந்த நிலையில் விஜய் படத்திற்குப் பிறகு எந்த வாய்ப்பும் வரவில்லை. சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது.
ஆனால் அமரன் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் மதராசி போன்ற அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவிட்டார். இதனால் வெங்கட் பிரபுவின் படம் தாமதமாகிக் கொண்டே போனது. இப்போது வெங்கட் பிரபு முழு ஸ்கிரிப்ட் சிவகார்த்திகேயனிடம் கொடுத்துள்ளார்.
வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் கூட்டணி உறுதியானது
கதை பிடித்துப் போனதால் உடனடியாக படப்பிடிப்பை தொடங்கலாம் என்ற சிவகார்த்திகேயன் குறிப்பிட்டாராம். ஆகையால் ஆகஸ்ட் மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க இருக்கிறதாம்.
மேலும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் எடுக்கப்பட இருக்கிறது. இதற்காக இப்போது வெங்கட் பிரபு போட்டியை கட்டி தயாராக இருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு தான் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் மதராசி படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.