தளபதி 68 படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் உறுதியாக வில்லை என்றாலும் படத்தை இயக்கப் போவது வெங்கட் பிரபு தான் என்பது மட்டும் ஓரளவுக்கு கணிக்கப்பட்டு இருக்கிறது. வெங்கட் பிரபு ஏற்கனவே நடிகர் அஜித் குமாரை வைத்து மங்காத்தா என்னும் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்திருந்தார்.
வெங்கட் பிரபுவின் படங்களை பொருத்தவரைக்கும் எந்த ஒரு சீரியஸ் சீன்களும் இல்லாமல் இரண்டரை மணி நேரம் ஒரு நல்ல படத்தை, சிரிப்புடன் பார்த்த திருப்தி கிடைக்கும். நடிகர் விஜய்யும் நண்பன் திரைப்படத்திற்கு பிறகு அதுபோன்ற திரைப்படங்களில் நடிக்கவில்லை. எனவே மீண்டும் பழைய விஜய்யின் சாயலில் ஒரு படத்தை பார்த்து விடலாம் என்பது ரசிகர்களின் ஆசையாகவும் இருக்கிறது.
வெங்கட் பிரபுவின் திரைப்படங்கள் என்றாலே அது கண்டிப்பாக யுவன் சங்கர் ராஜாவின் இசையில் தான் அமையும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. ஆனால் தளபதி 68 யுவன் இசை வேண்டாம் என விஜய் சொல்லி இருப்பதாகவும் அவருக்கு பதில் இசையமைப்பாளர் அனிருத்தை பரிந்துரை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதேபோன்று வெங்கட் பிரபுவின் படங்கள் என்றாலே அதில் பிரேம்ஜி இல்லாமல் இருக்காது. ஆனால் தளபதி விஜய் பிரேம்ஜி இந்த படத்தில் நடிப்பதற்கும் முட்டுக்கட்டை போட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜி இல்லாமல் வெங்கட் பிரபுவின் படம் என்பது சாத்தியமா இல்லையா என்பது இனி வரும் அப்டேட்டுகளில் தான் தெரியும்.
இந்நிலையில் தளபதி 68ல் நடிப்பதற்கு கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இந்தப் படத்தில் நடிப்பதற்கு இரண்டு கதாநாயகிகளை தேர்வு செய்து வைத்திருக்கிறாராம். அதில் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றொருவர் நடிகை சாய் பல்லவி. அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகள் முடிவடைந்த பிறகு இவர்கள் இருவரில் ஒருவர் இந்த படத்தில் நடிப்பார்கள்.
தளபதி 68 அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்றும், மேலும் இதில் கதாநாயகிக்கு முக்கியமான இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் நடிகை நயன்தாரா இந்தப் படத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. கால்ஷீட் அல்லது சம்பள பிரச்சனை ஏதாவது நடந்தால் கண்டிப்பாக சாய் பல்லவி கதாநாயகியாக நடிப்பார்.