மாநாடு வெற்றியால் தலைகால் புரியாமல் ஆடும் வெங்கட் பிரபு.. ரஜினி கூட்டணிக்கு அவர் கூறிய பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி ரஜினியின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

அதன் பிறகு, வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததை தொடர்ந்து ரஜினியை வைத்து அடுத்த படம் வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. இந்த புதிய கூட்டணி அமைந்தால் ஒரு மாஸான படம் வெளியாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தற்போது ரஜினியை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்குவதற்கு எண்ணம் இல்லையாம். தெலுங்கு சினிமாவில் ஆர்வம் காட்டி வரும் வெங்கட்பிரபு தன்னுடைய தெலுங்கு படங்களை முடித்துவிட்டு தான் தமிழ் படங்களை இயக்க உள்ளாராம். அதன் பிறகுதான் ரஜினி படத்தை இயக்குவார் என திரைவட்டாரத்தில் கூறப்படுகிறது.

மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு அதில் நடித்த நடிகர்கள், இயக்குனர் என பலரது சம்பளம்களும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெங்கட் பிரபுவின் முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட மன்மதலீலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் மாநாடு படத்தை வெங்கட்பிரபு தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார். இப்படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு கதையை சற்று மாற்றம் செய்து எடுக்க உள்ளார் வெங்கட் பிரபு. நாக சைதன்யா நடிக்கும் இப்படத்தில் வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யா கதாபாத்திரத்தில் ரவி டேஜா நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு பிறகு கிச்சா சுதீப் நடிக்க உள்ள படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இதற்க்கு இடையில் அவர் ரஜினியை சந்தித்து கதை கூறி இருப்பதாகவும் விரைவில் இது உறுதியாகி விடும் என எதிர்பார்த்தது. ஆனால் வரிசையாக படங்களில் கமிட்டாகி உள்ள வெங்கட் பிரபு ரஜினியை வைத்து எடுப்பது சாத்தியமா என்பது கேள்விக்குறிதான்.

இதனால் மற்ற படங்களை முடித்துவிட்டு தமிழ் படங்களுக்கு வருகிறேன் என்பது போன்று தெரிவித்துவிட்டாராம். இதனால் கோலிவுட் மட்டுமில்லாமல் தென்னிந்தியளவில் வெங்கட்பிரபு ஒரு ரவுண்டு வருவார்  என்பது உறுதியாகியுள்ளது.