டோட்டலா சரண்டரான சிவகார்த்திகேயன்.. டைம் டிராவலுக்கு மீண்டும் கூட்டிட்டு போகும் வெங்கட் பிரபு

பிரச்சனையில் இருந்த பராசக்தி படத்தின் சூட்டிங் மீண்டும் ஆரம்பிக்கவிருக்கிறது. ஸ்ரீலங்காவில் நடந்து வந்த சூட்டிங், தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸ் மீது ED ரெய்டு நடத்தப்பட்டதால் நின்று போனது. நிதி பற்றாக்குறையால் தவித்து வந்தவர்கள் இப்பொழுது படத்தை முடிக்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

இந்த படத்தை 2026 பொங்கலுக்கு வெளியிடுவதற்கு திட்டமிட்டிருந்தனர் ஆனால் அதற்கு சிக்கல் வந்து விடுமோ என பயந்த சிவகார்த்திகேயன் அவசரமாக வெங்கட் பிரபுவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இவர்கள் கூட்டணியில் ஒரு படம் ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

நவம்பர் இரண்டாவது வாரத்தில் வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் படம் சூட்டிங் நடைபெற உள்ளது. இந்த படத்திற்கான ஹீரோயின் தேடுதல் பணியில் இறங்கி இருந்தார் வெங்கட் பிரபு. இப்பொழுது இரண்டு ஹீரோயின்களை தேர்வு செய்துள்ளார். இது ஒரு டைம் டிராவல் படமாம்.

ஏற்கனவே வெங்கட் பிரபு தனது சூப்பர் ஹிட் படமான மாநாடு படத்தை இப்படித்தான் அமைத்திருந்தார். இப்பொழுது சிவகார்த்திகேயன் படத்திற்கு இரண்டு ஹீரோயின்களை தேர்வு செய்துள்ளார். மாநாடு படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் இப்பொழுது தமிழ் படங்களில் கலக்கி கொண்டிருக்கும் ஹீரோயின் கையாடு லோகர் இருவரையும் புக் செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் படங்களிலேயே இதுதான் பெரிய பட்ஜெட் படமாம். இதற்கு முன்னர் அமரன் படம் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாம். ஆனால் இந்த படம் அதையும் தாண்டும் என்கிறார்கள். பராசக்தி படம் முடிந்த பிறகு குட் நைட் டைரக்டர் விநாயக் சந்திரசேகர் உடன் அடுத்த படம். அது முடிந்தவுடன் வெங்கட் பிரபு படம் தொடங்க இருக்கிறது.