பிரச்சனை மேல் பிரச்சனையில் ஏகே 62.. விக்னேஷ் சிவன், நயன்தாரா பண்ணும் ஓவர் சொதப்பல்

அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் ஏகே 62. இந்த படத்தின் ஆர்டிஸ்ட் தேடுதல் வேட்டை நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் சரியான ஆர்டிஸ்ட்டுகள் யாரும் செட் ஆகாமல் இழுத்தடித்துக் கொண்டே போகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரி ஏற்கனவே அஜித் கேட்டு விட்டாராம் கதை பிடித்துப் போகவே அதற்கு கால் சீட்டுகள் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதால் சிறிது அவகாசம் தேவைப்படுவதால் இந்த படம் சற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் திரிஷா நடிப்பதாக கூறினார்கள் ஆனால் இப்போது த்ரிஷா இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக வேறு ஒருவரைத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.அது மட்டுமின்றி நயன்தாராவுக்கும், த்ரிஷாவிற்கும் ஏதோ கருத்து வேறுபாடு இருப்பதாக கூறுகின்றனர்.

நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறுவது திரிஷாவுக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் தான் த்ரிஷா இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் என்றும் கூறுகின்றனர். இப்பொழுது அஜித்துக்கு தகுந்தார்போல் ஒரு ஹீரோயினை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே காஜல் அகர்வால் என இந்த ஹீரோயின் தேடுதல் படலம் நீண்டு கொண்டே போகிறது. அதன் பின்னர் காஜல் அகர்வாலும் கல்யாணமாகி குழந்தை பெற்றுக் கொண்டதால் அவரும் இந்த படத்தில் இருந்து கழட்டி விடப்பட்டார். ஏற்கனவே விவேகம் படத்தில் காஜல் அகர்வால், அஜித்துடன் சேர்ந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தும் இப்பொழுது துணிவு படத்தின் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். விக்னேஷ் சிவன் – நயன்தாரா அஜித்தின் ஹீரோயின் விஷயத்தில் ஓவர் சொதப்பி வருகின்றனர். ஏற்கனவே முதலில் அவருடன் திரிஷா தான் நடிப்பார் என்று அஜித்திடம் கூறியிருந்தாராம். இப்போது அவர்கள் சொந்த பிரச்சனைக்காக திரிஷாவை படத்தில் இருந்து நீக்கி விட்டனர்