விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியானது.
சமீபத்தில் வெளியான அரபி குத்து பாடல் உலக அளவில் சென்றடைந்து மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. அதன்பிறகு பீஸ்ட் படக்குழுவினர் படத்தினைப் பற்றிய அப்டேட்களை வெளியிடாமல் தற்போது வரை சஸ்பென்சாக வைத்துள்ளனர். அதனால் பீஸ்ட் படத்தினை பற்றி எந்த ஒரு அப்டேட் வெளியாகவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது களத்தில் குதித்துள்ளனர்.
அதுவும் ஒரு சில விஜய் ரசிகர்கள் நேரடியாக சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு போன் செய்து கலாநிதி மாறனிடம் பேச வேண்டும் பீஸ்ட் படத்தின் அப்டேட் கேட்க வேண்டுமென பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் கூடிய விரைவில் பீஸ்ட் படத்தின் அப்டேட் வெளியாகும் என அவர்கள் தரப்பிலிருந்து கூறியதையடுத்து விஜய் ரசிகர்கள் அதற்காக காத்திருந்தனர்.
ஆனால் தற்போது வரை எந்த ஒரு அப்டேட் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் அணி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் வீரர் ஷமியிடம் பீஸ்ட் படத்தின் அப்டேட்டை கேட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் எப்போதும் சாந்தமாக இருப்பார்கள். தற்போது இவர்களும் பீஸ்ட் படத்தின் அப்டேட்டை கேட்டு சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் கூடிய விரைவில் பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. அதனால் விஜய் ரசிகர்கள் விஜய் பேசுவதை கேட்பதற்காக தற்போது ஆவலாக உள்ளனர். மேலும் கூடிய விரைவில் இதுபற்றிய அப்டேட்கள் வெளியாகும் எனவும் அதுவரை விஜய் ரசிகர்கள் பொறுத்திருக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே அஜீத் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டை சமூக வலைதளங்களில் கேட்டு வந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர்களும் களத்தில் குதித்துள்ளதால் கூடிய விரைவில் இதற்காக பீஸ்ட் படத்தின் அப்டேட் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறிவருகின்றனர்.