இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது காக்கி, பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் கோடியில் ஒருவன், தமிழரசன், அக்கினி சிறகுகள் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசிற்கு காத்திருக்கின்றன.
2005 ஆம் ஆண்டு சுக்ரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் டிஷ்யூம், நான் அவனில்லை, காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், அங்காடித்தெரு, உத்தமபுத்திரன் போன்ற ஹிட் படங்களுக்கு மியூசிக் அமைத்து கோலிவுட்டின் முக்கிய இசையமைப்பாளர் ஆனார்.
இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நான்’ என்னும் த்ரில்லர் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றதை தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் போன்ற படங்களில் நடித்தார். இவர் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதைக்களத்திற்காகவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய ஹிட் படம் ஆனது. ஆனால் இந்த படத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விஜய் ஆண்டனிக்கு வேறு எந்த படமும் வெற்றியை பெற்று தரவில்லை. கைவசம் 6,7 படங்கள் வைத்திருக்கிறார். அதில் 3,4 நடித்து முடித்திருக்கிறார். இதில் ஒரு படத்தில் கூட அவர் ஸ்டைல் கெட்டப்பை மாற்றவில்லை.
இப்படி ஒரே ஸ்டைலில் நடிப்பது கூட படத்தின் தோல்விக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இப்போது அவர் நடித்த தமிழரசன் திரைப்படம் ரிலீசிற்கு காத்திருக்கிறது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாத அளவிற்கு பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
தமிழரசு படத்தை பெப்சி சிவா தயாரித்து இருக்கிறார். இவர் ஏற்கனவே தயாரித்த படத்தின் கடன் பிரச்னை அதிகமாக இருப்பதால் அந்த கடனை அடைத்தால் தான் இந்த படத்தை ரிலீஸ் பண்ண விடுவோம் என்று இப்போது கடன்காரர்கள் கறாராக இருக்கிறார்களாம். இதனால் விஜய் ஆண்டனி தமிழரசன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்.