நடிகர் விஜய் அவர்கள் மாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து மிக பிரம்மாண்டமாக பீஸ்ட் படத்தில் இயக்குனர் நெல்சன், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் இவர்கள் கூட்டணியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் மக்களிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் படத்தின் ஒவ்வொரு விஷயங்களும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய வண்ணமும் இருந்தன.
படத்தின் ஒவ்வொரு விஷயங்களும் பிரம்மாண்டமாக வெளிவந்த வண்ணம் இருந்தது. அனிருத் இசையமைக்க பாடல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன. யாரும் எதிர்பார்க்காத வகையில் பாடல்கள் உலகம் முழுக்க அனைவரிடமும் சென்று சேரும் விதத்தில் அருமையான இசை அமைந்தது.
இப்படி ஒவ்வொன்றாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் படத்தின் டிரைலர் எப்போது வரும் என்று எதிர்பார்த்த கொண்டிருக்கும்பொழுது டிரைலர் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஏப்ரல் 13 படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பில் திணறியது. முதல் நாள் படத்தின் கலவையான விமர்சனங்கள் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. படம் நன்றாக இல்லை என்று ஒரே நாளில் படம் விமர்சனங்களை பெற்றது.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் படத்தின் நஷ்டத்தை சரிசெய்ய விஜயிடம் அடுத்த படத்தின் கால்ஷீட் கொடுத்து வேண்டும். அந்தப்படத்தின் சம்பளத்தை குறைத்து நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எடுக்க உள்ளாராம்.
இதற்கு முன்னர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தோல்வி அடைந்த பொழுது இதே மாதிரி சூப்பர் ஸ்டார் இடம் கேட்டு சூப்பர் ஸ்டாரும் அடுத்த படத்திற்கான கால்ஷீட் கொடுத்து சம்பளத்தை குறைத்துக் கொண்டு இப்பொழுது இயக்குனர் நெல்சன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதே பாணியை விஜயும் செய்ய வேண்டும் என்று தயாரிப்பு தரப்பில் கோரிக்கை விடுக்க கேட்கிறார்களாம்.
ஆனால் விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் விஜயை வைத்து படம் தயாரிக்க உள்ளனர். அதனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு தான் விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படத்தை தயாரிக்கும் வாய்ப்பை கொடுப்பார் என பலரும் கூறி வருகின்றனர்.