படை பலத்தை பெருக்கும் தில்ராஜ்.. செஞ்சதெல்லாம் போதும்னு கம்முனு வேடிக்கை பார்க்கும் விஜய்

தெலுங்கில் மிகப் பிரபலமாக இருக்கக்கூடிய தயாரிப்பாளர் தில்ராஜ் தளபதி விஜய் வைத்து வாரிசு படத்தை தயாரித்திருந்தார். அஜித் நடித்த துணிவுடன் போட்டி போட்டு வெளியான வாரிசு ஓரளவு வசூல் வேட்டை நடத்தினாலும் தோல்வி படமாகவே அமைந்தது. தெலுங்கு தயாரிப்பாளரும் இயக்குனரும் விஜயுடன் போட்ட கூட்டணியில் படம் முழுக்க தெலுங்கு சாயலிலும் குடும்ப செண்டிமெண்ட்டை மயமாகக் கொண்டு இருப்பதால் இளசுகள் மத்தியில் வாரிசு படம் எடுபடவில்லை.

தற்பொழுது தெலுங்கு திரை உலகில் கொடிகட்டி பறந்த இவர்கள் தமிழ் சினிமாவிலும் கால் பதிப்பதற்காக விஜய் உடன் வாரிசு படத்திற்காக இவர்கள் போட்ட கூட்டணியானது மண்ணைக் கவியுள்ளது. இதனால் அடுத்தடுத்து எடுக்கக்கூடிய படங்களில் இன்னும் தங்களை ஸ்ட்ராங்காக நிலை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ள டாப் ஹீரோக்களான சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் போன்ற நடிகர்களை அடுத்தடுத்து தங்களது தயாரிப்பில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவர்கள் தங்களிடமிருந்து கைநழுவி சென்று விடக்கூடாது என்பதற்காகவும் தில்ராஜ் முன்கூட்டியே அட்வான்ஸை கொடுத்து வலைவிரித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் தற்போது யாருக்கு மவுஸ் அதிகமாக இருக்கிறது என்பதை பார்த்து அவர்களை வளைத்து போட திட்டமிட்டுள்ளனர். அதிலும் ஏற்கனவே தமிழ் சினிமாவில் அதிக அளவு இளவட்டத்தைக் கொண்ட தளபதி விஜய் அவர்களின் மார்க்கெட்டையே உடைத்த தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜ் தற்பொழுது சிவகார்த்திகேயன், தனுஷ் படங்களை தயாரிக்க இருக்கும் நிலையில் விஜய் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு கண்டும் காணாமலும்  கம்முனு என்று இருக்கின்றார்.

ஆனால் இதற்கெல்லாம் காரணம் தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்கள் வெளியானதால் தில்ராஜ் வாரிசு படத்தை அன்று திரையிடாமல் இரண்டு நாட்களுக்குப் பின்னரே வெளியிட்டார். பெரிய ஸ்டார்களுடன் போட்டி போட ஆசைப்பட்ட விஜய்க்கு அந்த வாய்ப்பினை வழங்காமலேயே செய்துவிட்டார் தில்ராஜ். இதுவே விஜய்க்கு பெரிய வருத்தத்தை தந்திருக்கிறது. 

இதன் காரணமாகவே அங்கு நடந்த படத்தின் பிரமோஷனுக்கு கூட விஜய் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆந்திராவில் விஜயின் வாரிசு பட ரிலீசுக்கு பிறகு தில்ராஜ் விஜய்யை சந்தித்துள்ளார். ஆனால் அது கூட ஒரு சம்பிரதாயத்திற்கு மட்டுமே என்று சோசியல் மீடியாவில் தகவல்கள் பரவி வருகிறது. தனக்கு செஞ்சதெல்லாம் போதும் என்று விஜய் கமுக்கமாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.