Mari Selvaraj: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் மற்றும் திரை பிரபலங்களிடமும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதே நேரத்தில் இவர் ஜாதியை மையப்படுத்தி எடுக்கும் படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்து வருகிறது. தளபதி விஜய்க்கு பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஒருவர் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பதிலடி கொடுக்கும்படி பேசி இருக்கிறார்.
தளபதி விஜய்க்கு திருப்பாச்சி, சிவகாசி மற்றும் நடிகர் அஜித்குமாருக்கு திருப்பதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பேரரசு தான் தற்போது மாமன்னன் ரிலீசுக்கு பிறகு இதுபோன்ற ஜாதி சம்பந்தப்பட்ட படங்களை எடுக்கும் இயக்குனர்களை சரமாரியாக கேள்வி கேட்கும் வகையில் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில் அவர் ரொம்பவே ஆக்ரோஷமாகவும் பேசி இருக்கிறார்.
ஜாதியை வைத்து சினிமாவில் யாரும் யாரையும் ஏமாற்ற வேண்டாம். சினிமாவை பொருத்தவரைக்கும் ஜெயித்த ஜாதி மற்றும் ஜெயிக்காத ஜாதி என்று இரண்டு ஜாதிகள் மட்டும் தான் இருக்கின்றன. இசைஞானி இளையராஜா ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அவர் காலில் விழாத தயாரிப்பாளர்களும், நடிகர்களும் இல்லவே இல்லை. அந்த இடத்தில் ஜாதியும் எடுபடவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
ஜாதியை வைத்து படம் எடுங்கள், அதில் உள்ள வலியை சொல்லுங்கள், அதை மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி சொல்லுங்கள். ஆனால் பார்ப்பவர்களுக்கு வலிக்கும் படி சொல்லாதீர்கள். ஜாதிக்கு நாம் பயன்பட வேண்டும், அந்த ஜாதியை நாம் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தக் கூடாது. இல்லை என்றால் குறிப்பிட்ட ஜாதியில் ஏதாவது ஒரு பதவியை வாங்கிக்கொண்டு சென்று விடுங்கள் என்றும் பேரரசு சொல்லி இருக்கிறார்.
படத்தில் ஜாதியை பற்றி சொல்லும் இயக்குனர்கள் எல்லோரும் அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் எந்த ஜாதி என்று கேட்டுக் கொண்டா படம் எடுக்கிறீர்கள். எதற்காக ஜாதியை வைத்து இப்படி ஒரு ஏமாற்று வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றும் பேரடைஸ் அந்த பேட்டியில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இயக்குனர் பேரரசு இன்னும் அந்த பேட்டியில் ரொம்பவும் கோபமாகவும், ஆக்ரோஷமாகவும் பல விஷயங்களை பேசி இருக்கிறார். சமீப காலமாக தமிழ் சினிமாவில் ஜாதி சம்பந்தப்பட்ட படங்கள் அதிகம் வருவதை இவருடைய கோபத்தின் வெளிப்பாடு காரணம் என்பது நன்றாகவே தெரிகிறது. அதிலும் மாமன்னன் திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு தான் இவர் இப்படி மனம் திறந்து பேசி இருக்கிறார்.