முத்தையா போனதால் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் விஜய் சேதுபதி.. உறுதியான வித்தியாசமான டைட்டில்

Actor Vijay Sethupathi Movie Update: சினிமாவில் வில்லன், ஹீரோ என அனைத்து கதாபாத்திரங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் இந்தப் படத்தில் அவர் நடிப்பதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதால் அந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு முத்தையா முரளிதரனே வேண்டுகோள் விடுத்ததால், அந்த படத்தில் இருந்து விலகியதாக விஜய் சேதுபதி அறிவித்தார். அவருக்கு பதில் இப்போது 800 என்று பெயரிடப்பட்ட அந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் மாதுர் மிட்டல் நடித்து வருகிறார்.

முத்தையா படம் போனால் என்ன, இப்போது விஜய் சேதுபதி அடுத்ததாக மீண்டும் ஒரு பயோபிக் படத்தில் கமிட்டாக இருக்கிறார். அந்த படத்தின் வித்தியாசமான டைட்டிலைப் பற்றிய தகவலும் தெரியவந்துள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கமிட் ஆகி இருக்கிறார்.

ஒரு சாதாரண மனிதன் எப்படி முதல்வர் ஆகிறார், அவருடைய அரசியல் வாழ்க்கையில் எவ்வளவு சவால்களை எதிர்கொண்டு முன்னேறுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்திற்கு ‘லீடர் ராமையா’ என்ற டைட்டிலை வைத்திருக்கின்றனர்.

இது ரொம்பவே வித்யாசமான டைட்டிலாக இருக்கிறது, படமும் நன்றாக வரும் என்றும் எதிர்பார்க்கின்றனர். இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக தமிழ், தெலுங்கு மலையாளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். விரைவில் இந்த படத்தை குறித்த முழு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரப் போகிறது.

அதேசமயம் இப்போது விஜய் சேதுபதி கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பயோ பிக்கில் நடிப்பது போல, நடிகர் ஜீவாவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோ பிக் படத்திலும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் நடிகர்கள்எதற்காக அக்கட தேசத்து முதலமைச்சர்களின் படங்களில் நடிப்பதற்கு இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தில் எவ்வளவோ நல்ல நல்ல தலைவர்கள் இருக்கிறார்களே, அவர்களது வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிக்கலாமே என்று கோலிவுட் ஆதங்கப்படுகிறது.