மார்க்கெட்டை சுத்தமா தொடச்சி தூர போட போகும் சைக்கோ இயக்குனர்.. பீதியில் இருக்கும் விஜய் சேதுபதி

Vijay Sethupathi Movie Update: தமிழ் சினிமாவில் ஆல் ரவுண்டராக கலக்கி கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு சமீப கால படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவு கை கொடுக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் கமிட்டாகும் விஜய் சேதுபதி இப்போது சைக்கோ இயக்குனரின் கையில் வசமா சிக்கிக்கொண்டார்.

பிசாசு, சைக்கோ போன்ற படங்களை இயக்கி பேமஸான இயக்குனர் தான் மிஸ்கின். இவர் சமீப கால டாப் ஹீரோக்களின் படங்கள் ஆன சிவகார்த்திகேயனின் மாவீரன், தளபதி விஜய்யின் லியோ போன்ற படங்களில் முரட்டு வில்லனாக நடித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

அதே சமயம் விஜய்க்காக தயார் செய்து வைத்திருந்த பக்கா ஆக்சன் படத்தில் அவரை எப்படியாவது நடிக்க வைக்க போராடினார். ஆனால் விஜய் மிஸ்கினின் கதையை கூட கேட்க தயாராக இல்லை. இப்போது அந்தக் கதையில் தான் விஜய் சேதுபதியை வைத்து, அந்த படத்தை எடுக்க பார்க்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆன டிசம்பரில் துவங்கப் போகிறார்கள். மிஸ்கின் விஜய் சேதுபதிக்கு நெருங்கிய நண்பர் என்பதால் தான் இந்த படத்தில் நடிக்கிறார். ஆனால் இப்போ ஏன்டா இந்த படத்துல நடிக்கிறோம் என்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கவலைப்படுகிறார்.

மிகுந்த கலக்கத்தில் இருக்கும் விஜய் சேதுபதி

ஏற்கனவே விஜய் சேதுபதியின் மார்க்கெட் சரிந்திருக்கும் நிலையில், மிஸ்கின் அதை சுத்தமா தொடச்சு தூரப் போட பார்க்கிறார். ஏனென்றால் இந்த படத்திற்கு மிஸ்கின் தான் இசையமைக்கிறார். ஏற்கனவே மிஸ்கினின் தம்பியும் சவரக்கத்தி பட இயக்குனருமான ஆதித்யா இயக்கிய ‘டெவில்’ படத்திற்கு இசையமைத்தார்.

ஆனால் அதற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்கள் குவிந்தது. அப்படி இருக்கும்போது மறுபடியும் இந்தப் படத்திற்கு நான் தான் இசையமைப்பேன். தன்னுடைய படத்திற்கு தன்னைவிட வேறொருவர் இசையில் பங்களிப்பு செலுத்தி விட முடியாது என்ற குருட்டு நம்பிக்கையுடன் மிஸ்கின் செய்யும் செயல், விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை தான் ஒன்னும் இல்லாமல் ஆக்கப் போகிறது.