விஜய் டிவியில் போட்டியாளராக இருந்து தொகுப்பாளராக வளர்ந்து இப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். நான் மகான் அல்ல, புதுப்பேட்டை படங்களில் துணை பாத்திரமாக வந்து தென்மேற்கு பருவக்காற்று படத்தின் வாயிலாக அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
மேலும் ரஜினி, எம்.ஜி.ஆர் போலாக நினைத்தார். விஜய், ரஜினி போலாக நினைத்தார் இப்போது சிவகார்த்திகேயன் உட்பட பல்வேறு இளம் ஹீரோக்கள் விஜய்யாக நினைப்பதில் பெரிய மாற்றமில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஆரம்ப காலகட்டத்தில் தளபதி விஜய் போலவே குழந்தைகளையும் கவர்ந்து வந்தார் சிவகார்த்திகேயன். அவர் தேர்வு செய்யும் கதையில் காமெடி மற்றும் பாடல் காட்சிகள் குழந்தைகளுக்கு பிடித்தப்படியே இருக்க வேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருக்கும்.
இப்படியான கதைகளை தேர்வு செய்து தளபதி விஜய் போலவே மாறவேண்டும் என்பதே சிவகார்த்திகேயன் ஆசையாக பார்க்கப்பட்டது. ஆனால் சில நபர்களை நம்பி கோடிக்கணக்கில் கடன் பெற்று விட்டதால் தற்போது அந்த கடனை அடைப்பதற்காகவை போராடி வருகிறார் சிவகார்த்திகேயன்.
வருடத்திற்கு 8 முதல் 10 படங்களை வெளியிடும் விஜய் சேதுபதி நடிக்கும் படங்களில் கெஸ்ட் ரோல் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த படங்களில் நடிக்க ஒத்துக்கொள்வதே நன்றி கடனுக்காக வந்து செல்வாராம், அதற்காக ஒரு சம்பளம் கூட வாங்குவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இது போன்ற நன்றி கடனுக்காக விஜய்சேதுபதி நடிப்பதை நிறுத்திவிட்டு தரமான கதைகளை தேர்வு செய்து வில்லன் மற்றும் ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.
இருவருமே பல்வேறு நபர்களை நம்பி பணத்தை ஏமாந்து விட்டார்கள் என்றும் அந்த கடனை அடைக்க படம் நடித்ததாகவும் குறிப்பிட்டார். இப்போது தான் சினிமாவிலும் வாழ்விலும் ஓரளவு நல்ல நிலைக்கு வந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
