தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த விஜய் சேதுபதி தற்போது வில்லன், குணச்சித்திரம் போன்ற பல கேரக்டர்களையும் ஏற்று நடித்து வருகிறார். ரஜினி, விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்திருக்கும் இவர் தற்போது நடிகர் கமலுக்கு வில்லனாக விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி இதுவரை இல்லாத அளவிற்கு வில்லத்தனத்தை காட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் அவரின் நடிப்பை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதி தன் சினிமா அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் சிறுவயதில் சினிமாவில் நடிப்பதற்காக ஒரு ஆடிஷனல் கலந்து கொண்டிருக்கிறார். அது வேறு எந்த படமும் அல்ல கமலின் நடிப்பில் வெளிவந்த நம்மவர் படம் தான்.
அந்த படத்தில் கல்லூரி மாணவர் கேரக்டருக்காக விஜய் சேதுபதியும் அவருடைய நண்பர்களும் ஆடிஷன் சென்றிருக்கின்றனர். அதில் அவருடைய நண்பர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆனால் விஜய் சேதுபதி பார்ப்பதற்கு மிகவும் சிறிய பையன் போல் இருந்ததால் அவர் செலக்ட் ஆகவில்லை.
அந்த ஒரு நாள் நடித்ததற்காக அவருடைய நண்பர்களுக்கு 100 ரூபாய் சம்பளம் கொடுத்ததாகவும், எனக்கு மதிய உணவு மட்டும் கொடுத்து அனுப்பி விட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அன்று தேர்வு செய்யப்பட்ட என் நண்பர்கள் அனைவரும் இன்று சினிமாவில் கிடையாது. ஆனால் செலக்ட் செய்யப்படாத நான் என்று சினிமாவில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அன்று கமலுடன் நடிக்க முடியாமல் போன விஜய் சேதுபதி இன்று அவருக்கு வில்லனாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ஒருவகையில் இந்த வாய்ப்பு அவருக்கு தகுதியான ஒன்றுதான். தற்போது அவருக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை அவர் கெட்டியாக பிடித்துக் கொண்டால் எதிர்காலத்தில் அவர் கமல் அளவுக்கு போற்றப்படும் நடிகராக நிச்சயம் மாறுவார்.