திடீர் தளபதிக்கு பயத்தை காட்டிய விஜய் வாரிசு.. பெயருக்கு வந்த ஆபத்து 

Jason Sanjay: விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். ஜனநாயகன் தான் அவருடைய கடைசி படம் என்றும் அறிவித்து விட்டார். இதனால் அவரின் ரசிகர்கள் மிகுந்த துயரத்தில் இருக்கின்றனர். 

ஆனாலும் கொஞ்சம் ஆறுதல் தரும் வகையில் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். லைக்கா தயாரிப்பில் அவர் இயக்கும் முதல் படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன்.

அவர் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதால் லைக்கா ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சஞ்சய் தான் அனைவரையும் இம்ப்ரெஸ் செய்துள்ளார். 

திடீர் தளபதிக்கு பயத்தை காட்டிய விஜய் வாரிசு

அப்பாவை போலவே ஸ்மார்ட் ஆக இருக்கும் இவர் ஹீரோவாகி இருக்கலாமே என்று தோன்றாமல் இல்லை. ஆனால் எப்படியும் இரண்டு மூன்று வருடங்களில் அது நடந்தே தீரும். 

இப்படி பக்கா ஹீரோ மெட்டீரியலாக இருக்கும் இவரை யாரும் விட்டு வைக்க மாட்டார்கள். விரைவில் இவரை ஹீரோவாக நாம் திரையில் காணலாம் என்கின்றது கோடம்பாக்க வட்டாரம். 

ஆக மொத்தம் விஜய் இடத்திற்கு இனி யாரும் போட்டி போட முடியாது. அந்த இடம் வாரிசுக்கு தான் என்று இப்போதே ஒரு சிலர் பேச தொடங்கி விட்டனர். 

இதனால் பாவம் சிவகார்த்திகேயன் தான் பயந்து இருப்பார். அடுத்த விஜய் திடீர் தளபதி என கோட் படத்திற்கு பிறகு இவரின் ரசிகர்கள் அலப்பறை செய்து வருகின்றனர். 

அதற்கு முடிவு கட்டும் வகையில் சஞ்சய்க்கு தான் அந்த இடம் என விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் தற்போது கூறி வருகின்றனர். ஆக மொத்தம் சிவகார்த்திகேயனுக்கு தளபதியின் வாரிசு பயத்தை காட்டிவிட்டார்.