Thalapathy Vijay: நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கும் நிலையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) படத்தின் படப்பிடிப்பில் பயங்கர பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வருவதற்குள் படபிடிப்பை முடித்து விட வேண்டும் என விஜய் அறிவுறுத்தி இருக்கும் நிலையில், அந்த படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக யாரை நடிக்க வைப்பது என பெரிய குழப்பத்தில் இருக்கிறது பட குழு. இதுவரை நான்கு நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு பின்னர் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.
விஜய்க்கு தங்கச்சியாக நடிக்க தேர்வான 4 நடிகைகள்
இவானா: ஜோதிகா நடித்திருந்த நாச்சியார் படத்தில் இவானா முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தாலும் லவ் டுடே படத்தின் மூலம் தான் அவருக்கென்று தமிழ் சினிமாவில் அடையாளம் கிடைத்தது. விஜய் அடுத்து வெங்கட் பிரபுவுடன் இணைய இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த போது இவானாவுக்கு அந்த படத்தில் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. முதலில் விஜய்க்கு தங்கச்சியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டு பின்னர் சில காரணங்களால் அவரை நடிக்க வைக்கவில்லை.
நிவேதா தாமஸ்: பாபநாசம் மற்றும் தர்பார் போன்ற படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்தவர் நிவேதா தாமஸ். இவர் ஏற்கனவே ஜில்லா படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கச்சியாக நடித்திருந்தால். GOAT படத்திலும் அவரை தங்கச்சியாக நடிக்க வைக்க பிளான் செய்து, பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டு இருக்கிறார்கள் படக்குழுவை சேர்ந்தவர்கள்.
அம்மு அபிராமி: ராட்சசன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர்தான் அம்மு அபிராமி. அதைத் தொடர்ந்து அசுரன் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் நல்ல கவனத்தைப் பெற்றிருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட இவரை இந்தப் படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடிக்க வைக்கலாம் என பட குழு தேர்வு செய்து பின்னர் மாற்றி இருக்கிறது.
ஐஸ்வர்யா லட்சுமி: தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி போன்ற படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். GOAT படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக இவரையும் நடிக்க வைக்கலாமா என பட குழு முதலில் திட்டமிட்டு இருக்கிறது.
மேல் கூறப்பட்ட நான்கு நடிகைகளுமே விஜய்க்கு தங்கச்சியாக நடிப்பதற்கு செட்டாகவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் படத்தை முடிக்க வேண்டும் என்பதால் இயக்குனர் வெங்கட் பிரபு என்ன செய்வது என தெரியாமல் திணறிக் கொண்டிருந்தார். இறுதியாக தற்போது பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டன் என்பவரது மகள் அபிதாவை விஜய்க்கு தங்கச்சியாக நடிக்க வைக்க தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.