சன் டிவிக்கு பிறகு விஜய் டிவி வந்தாலும் தனது ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இதில் உள்ள பிரபலங்கள் ரசிகர்களிடம் மிகவும் பரிச்சயமானவர்களாக இருந்து வருகிறார்கள். ஆரம்பம் முதலே விஜய் டிவி பிரபலங்கள் பல சர்ச்சைகளில் சிக்கி வரும் விஷயங்களை நாம் கேட்டிருக்கிறோம்.
அந்த வகையில் இப்போது திருட்டு வேளையில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் மாட்டிக்கொண்டது அம்பலமாகியுள்ளது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் பொதுவாக பெண் வேடமிட்டு தான் நிறைய நிகழ்ச்சிகளில் நடிப்பார்.
இவர் வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் இடையே ஆன பிரச்சனையில் கூட தேவையில்லாமல் மூக்கை நுழைத்து சர்ச்சையில் சிக்கி இருந்தார். இப்போது ஒரு திருட்டு வேளையில் ஈடுபட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்டு உள்ளார். அதாவது சேப்பாக்கத்தில் இப்போது ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது.
ஐபிஎல் போட்டியை சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலர் பார்க்க வருகின்றனர். கிரிக்கெட்டை தாண்டி அவர்களைப் பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் சினிமாவில் துணை நடிகையான கும்தாஜ் மற்றும் நாஞ்சில் விஜயன் ஆகியோர் டிக்கெட்டை பிளாக்கில் விற்றுள்ளனர்.
அதுவும் 1500 ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டை 6500 ரூபாய்க்கு, அதாவது ஒரு டிக்கெட்டுக்கு 5000 ரூபாய் லாபம் வைத்து விற்றுள்ளனர். அதுவும் தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து நூதனமாக விற்று தில்லாலங்கடி வேலை பார்த்துள்ளனர். இந்நிலையில் இவர்களது புட்டு அம்பலமானதற்கு ஒரு விஷயம் உள்ளது.
அதாவது தனியார் தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் ஒருவர் இவரிடம் டிக்கெட் வாங்குவது போல் தொடர்பு கொண்ட பேசி இந்த விஷயத்தை அம்பலமாக்கி உள்ளார். நாஞ்சில் விஜயன் மற்றும் கும்தாஜ் மீது வழக்கு தொடர வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் பணத்தாசையால் இப்படியா செய்வது என விஜய் டிவி பிரபலம் நாஞ்சிலை காரி துப்புகிறார்கள்.