சன் டிவியை அட்ட காப்பியடிக்கும் விஜய் டிவி.. இதுக்கு பேசாம கும்கி படமே போடலாம்

தமிழ் சேனல்களுக்குள் இது போன்று மாற்றி மாற்றி செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. ஒரு சேனலில் பிரபலமாகும் நிகழ்ச்சிகளை போன்றே இன்னொரு சேனல்களில் வேறு ஒரு பெயரில் தொடங்குவார்கள்.

சீரியலும் அப்படித்தான். ஒரு தொலைக்காட்சியில் ஒரு கான்செப்ட் வெற்றி அடைந்துவிட்டால் அதே கதையை மையமாக வைத்து வேறு ஒரு பெயரில் பிரம்மாண்டமாக தயாரித்து விடுவார்கள்.

இப்படி மாற்றி மாற்றி வண்டியை ஓட்டிக் கொண்டு இருக்கின்றனர். இவ்வளவு நாட்களாக சீரியலை வைத்து தாய்மார்களை ஏமாற்றி டிஆர்பி பறித்து வந்த பல சேனல்களும் ஊரடங்கு போடப்பட்டதால் திண்டாட்டங்களை சந்தித்துள்ளது.

சன்டிவி ஏகப்பட்ட வருடங்கள் தமிழ் சினிமாவில் இருப்பதால் தமிழ் ரசிகர்களுக்கு எந்தெந்த நேரங்களில் என்னென்ன தேவை என்பதை தெரிந்து அதற்குத் தகுந்த மாதிரி கொடுப்பார்கள். அதைப்போல் தான் கடந்த ஊரடங்கு திரைப்படங்களை போட்டு சமாளித்தனர்.

அதேபோல் தங்களுடைய பழைய வெற்றிபெற்ற சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்து அதிலும் டிஆர்பியை பெற்றனர். ஆனால் மற்ற சேனல்கள் சமீபகாலமாகத்தான் சீரியல்களில் மிகப் பெரிய அளவில் வளர்ந்தன.

அதனால் விஜய் டிவியும் சன் டிவியும் பின்பற்ற முடிவு செய்துள்ளார். சன் டிவியைப் போலவே விஜய் டிவியும் தங்களுடைய பழைய சூப்பர் ஹிட் சீரியலான மகாபாரதத்தை மீண்டும் ஒளிபரப்ப உள்ளதாம்.