நின்னாலும் குத்தம் நடந்தாலும் குத்தமா.? காக்கா பருந்து கதையால் திட்டம் தீட்டும் விஜய்

Actor Rajini and Vijay: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. அந்த வகையில் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும், ரஜினியின் கோடிக்கணக்கான ரசிகர்களும் கலந்து கொண்டார்கள். அடுத்ததாக ரஜினி எப்பொழுது மேடையில் பேச ஆரம்பிப்பார் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தார்கள். அதற்கேற்றார் போல் ரஜினி பேச ஆரம்பித்த பிறகு அனைவரும் கைத்தட்டி ஆரவாரபடுத்திக் கொண்டாடினார்கள். மேலும் அந்த நிகழ்ச்சியில் ரஜினி ஜெயிலர் படத்தை பற்றி பேசிய பிறகு, குட்டிக் கதையை சொல்லியிருந்தார்.

Also read: ரஜினிக்கு அலர்ஜியான 5 விஷயங்கள்.. எல்லாத்துக்கும் முடிவு கட்டி ஓட விட்ட சூப்பர் ஸ்டார்

பொதுவாக தற்போது முன்னணி நடிகர்கள் அனைவரும் அவர்கள் பட பிரமோஷன் நேரத்தில் மேடையில் கதை சொல்வது வழக்கமாகிவிட்டது. ஆனால் இவர்களுக்கெல்லாம் குருவாக இருந்தது ரஜினி தான். ஏனென்றால் ரஜினி மேடையில் ஏறிய பிறகு முக்கால்வாசி கதை சொல்வது வழக்கம். அப்படித்தான் ஜெயிலர் படத்தின் ஆடியோ லாஞ்சிலும் சொல்லியிருக்கிறார். அதாவது காகம் மற்றவர்களை தொந்தரவு செய்வதுதான் அதற்கு வேலையே.

அதனாலயே அது மேலே பறப்பதை மறந்து விடும். ஆனால் பருந்துக்கு அப்படி கிடையாது. அந்த பருந்துக்கு எந்த தொந்தரவு வந்தாலும் அதை எல்லாம் தகர்த்து எறிந்து மேலே பறந்து கொண்டே தான் இருக்கும் என்று கதையை முன் வைத்தார். இப்படி இவர் சொன்னதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் விஜய்யை தாக்கி தான் பேசி இருக்கிறார் என்று ரசிகர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

Also read: லண்டனில் மீட்டிங் போடும் விஜய், சூர்யா.. விரைவில் வெளியாக இருக்கும் அடுத்த பட அப்டேட்

ஆனால் விஜய்யை பற்றி ரஜினி நல்லவிதமாகத் தான் சொல்லி இருக்கிறார். அதை புரிந்து கொள்ளாமல் வேற மாதிரி திரும்பி விட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் எப்பொழுது ரஜினிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரி லியோ ஆடியோ லான்ச் பெரிய அளவில் நடைபெற இருக்கிறது.

இதில் விஜய் பேசும் போது அவரும் ஒரு குட்டி கதை சொல்லுவார். இந்த குட்டி கதை மூலம் ரஜினிக்கு பதிலடியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விஜய்யே சும்மா இருந்தாலும் ரசிகர்கள் சும்மா இருக்க விட மாட்டார்கள் போல, அவர்களுக்காகவே ரஜினிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று விஜய் திட்டம் தீட்டி வருகிறார்.

Also read: கமலை ஆதரித்து, ரஜினியை வளரவிடாமல் செய்த பாலிவுட்.. சூழ்ச்சிக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?