லெட்டர் எழுதிய விஜய்.. அண்ணனை இன்றுவரை விட்டுக்கொடுக்காத இளையதளபதி

கேப்டன் விஜயகாந்துக்கு விஜய் எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் சமீபமாக நெட்டிசன்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இவர்களுக்குள் இருக்கும் இப்படி ஒரு உறவு மக்களுக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சினிமாவின் மீது அதீத ஆசை கொண்ட விஜய், தொடக்க காலங்களில், இது எங்கள் நீதி, சட்டம் ஒரு விளையாட்டு, வசந்த ராகம், குடும்பம், வெற்றி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், சிறப்பு தோற்றத்திலும் நடித்தார். அதன் பின்னர் அவருடைய அப்பா SA சந்திரசேகர் விஜயை கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சி செய்தார்.

நாளைய தீர்ப்பு 1992 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் விஜய்க்கு அந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே சந்திரசேகர் அப்போதைய கோலிவுட்டின் கிங் ஆன கேப்டன் விஜயகாந்தின் செந்தூர பாண்டி திரைப்படத்தில் கேப்டனுக்கு தம்பியாக நடிக்க வைத்தார். இதனால் எளிதாக விஜய் ரசிகர்களின் கவனத்தை பெற்றார் என்றே சொல்லலாம்.

விஜய், யுவராணி நடித்த அந்த திரைப்படத்தில் விஜயகாந்த், கௌதமி கௌரவ வேடத்தில் நடித்திருந்தனர். மனோரமாவும் இவர்களுடன் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்கியது இயக்குனர் SA சந்திரசேகர். இந்த படம் நல்ல வெற்றி அடைந்தது. அதன் பின்னர் வந்த கேப்டனின் பிறந்தநாளின் போது விஜய் அவரை வாழ்த்தி ஒரு லெட்டர் எழுதியுள்ளார்.

இந்த லெட்டர் கேப்டனின் சமீபத்திய 70 ஆவது பிறந்தநாளின் போது மீண்டும் வைரலாகி வருகிறது. கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே அனைவரையும் மதிக்க கூடியவர். அவரை பற்றி பேசாத, புகழாத பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம். எந்த நிலைக்கு சென்றாலும் யாரையும் மறக்காதவர். எல்லோருக்கும் பல உதவிகள்  செய்திருக்கிறார்.

vijay-vijaykanth
vijay-vijaykanth

நடிகர் விஜய்யும், நல்ல குணமும், மதிக்க கூடிய பண்பும் உடையவர். சினிமா பிரபலங்களில் இருந்து தன்னுடைய ரசிகர்கள் வரை அனைவருக்கும் சம மரியாதை கொடுப்பவர். அவருடைய ஆரம்ப கலா சினிமாவின் வளர்ச்சியில் ஒரு பங்காக இருந்த விஜயகாந்த் மீது எப்போதும் அவருக்கு ஒரு தனிப்பட்ட பாசம் இருக்கிறதாம்.