ஆணவத்தால் அழிந்த விஜயகாந்த்.. இப்ப இருக்கிற நிலைமைக்கு அவர்தான் காரணம்

சமீபத்தில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார். அப்போது விஜயகாந்தின் உடல் நிலையை பார்த்து அவரது ரசிகர்கள் கண் கலங்கினர்.

நல்ல உள்ளம் கொண்டவராகவும், கம்பீரமாகவும் இருந்த மனுஷனுக்கு இப்படி ஒரு நிலைமையா என திரை பிரபலங்கள் முதல் தொண்டர்கள் வரை விஜயகாந்த் பற்றி வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தன்னை நாடி வருபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்யக்கூடியவர் விஜயகாந்த்.

ஆனால் தற்போது விஜயகாந்த் தன்னுடைய வேலையை தானே செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளார். இதற்கு காரணம் விஜயகாந்த் தான் என சினிமா விமர்சகர் வலைபேச்சு அந்தணன் கூறியுள்ளார். அதாவது ஆரம்பத்தில் அவருடைய கெட்ட பழக்கவழக்கங்கள் இவருடைய உடல் நிலையை மோசமாக்கி உள்ளது.

மேலும் ஒரு மனிதனுக்கு தோல்வியை விட வெற்றியின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது அவ்வளவு மரியாதையாக இருந்த விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு மிக மோசமாக நடந்து கொண்டார்.

விஜயகாந்தின் அருகில் செல்லவே பத்திரிக்கையாளர்கள் தயங்கினார்கள். திடீரென விஜயகாந்தின் இந்த ஆணவத்திற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. மேலும் பத்திரிக்கையாளர்கள் விட்ட சாபம் தான் விஜயகாந்த் தற்போது இந்த நிலைமையில் உள்ளார் என அவர் கூறியுள்ளார்.

சினிமா விமர்சகர் பேசியதற்கு விஜயகாந்தின் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும் பூரண நலம் பெற்று மீண்டும் கேப்டன் மக்களுக்காக வருவார் என தொண்டர்கள் தங்களை தேற்றிக்கொண்டு உள்ளனர்.