இப்பவே காசு பார்த்தா தான் உண்டு.. அடித்து பிடித்து GOAT டிஜிட்டல் உரிமையை தட்டி தூக்கிய நிறுவனம்

Actor Vijay: விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தாலும் அறிவித்தார் ஓடிடி, சாட்டிலைட், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவரும் பெரும் துக்கத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் விஜய் படம் வெளியாகிறது என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டமாக தான் இருக்கும்.

அந்த அளவுக்கு பாக்ஸ் ஆபிஸ் வசூல் தயாரிப்பாளர் உட்பட எல்லோருக்கும் லாபத்தை கொடுக்கும். அதனாலயே அவர் சினிமாவை விட்டு விலகுவது அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் தற்போது கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக ஒரு படத்தோடு சினிமாவுக்கு குட் பை சொல்ல இருக்கிறார்.

இதன் காரணமாக இந்த இரண்டு படங்களுக்குமான எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அது மட்டுமின்றி கோட் படத்தை வாங்குவதற்கு நீ நான் என கடுமையான போட்டியும் நிலவி வந்தது. அதன்படி டிஜிட்டல் உரிமையை வாங்குவதற்கு நடந்த ரேசில் தற்போது நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் வெற்றிவாகை சூடி இருக்கிறது.

Also read: அரசியல் எதிரியை தேர்ந்தெடுத்த தளபதி.. எதிராக கிளம்பிய விஜய் இணைய கூலிப்படைகள்

ஏற்கனவே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் டிஜிட்டல் உரிமையை சேர்த்து 125 கோடி வியாபாரம் ஆகி இருப்பதாக தகவல்கள் கசிந்தது. அதிலும் ஹிந்தி டிஜிட்டல் உரிமம் மட்டுமே 25 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது.

இந்நிலையில் தமிழ் உரிமையை நெட் ஃபிளிக்ஸ் பல கோடி கொடுத்து வாங்கி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. எப்போதுமே ரஜினி, கமல், அஜித் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களை வாங்குவதில் அமேசான் மற்றும் நெட் ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு இடையே பயங்கர மோதல் இருக்கும்.

மேலும் தற்போது விஜய் சினிமாவை விட்டு விலகுவதால் இப்போதே காசு பார்த்தால்தான் உண்டு என இந்த நிறுவனங்கள் போட்டி போட்டு வந்தது. அதில் நெட் ஃபிளிக்ஸ் படத்தை வாங்கி இருக்கும் நிலையில் தளபதி 69 படத்திற்கும் இப்போதே துண்டு போட்டு வைக்கும் வேலையிலும் பல நிறுவனங்கள் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: 20 வருடம் கழித்து ரீ-ரிலீஸ் ஆகும் விஜய்யின் படம்.. வசீகராவை மிஞ்சிய காமெடியின் வெறித்தனம்