விக்ரம், விஜய் சேதுபதி சேர்ந்து மிரட்ட போகும் படம்.. மாஸ் கதையில் கெத்து காமிக்க போகும் இயக்குனர்

விஜய் சேதுபதி கைவசம் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இதனால் தமிழ் திரையுலகமே இவரை மிகுந்த ஆச்சரியத்தில் பார்க்கிறது. அதில் மற்றொரு ஆச்சரியமாக இவர் தற்போது நடிகர் விக்ரம் நடிக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைய இருக்கிறார்.

விக்ரமின் நடிப்பில் கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதையடுத்து விக்ரம் பா ரஞ்சித் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

இந்தப் படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில் தற்போது விக்ரம் நடிக்க போகும் அடுத்த திரைப்படத்தை பற்றிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அந்தப் படத்தை காக்கா முட்டை படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்க இருக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சமீப காலமாகவே அவர் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது கமலுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ள இவர் தற்போது விக்ரமுடன் இணைந்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதியை வைத்து கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கிய மணிகண்டனுக்கு விமர்சன ரீதியாக பல பாராட்டுகள் கிடைத்தது. அதேபோல் இந்த படமும் மரண ஹிட் கொடுக்கும் என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.