கோப்ரா படத்தின் அடுத்தடுத்த நாள் வசூல் படக்குழுவையும், நடிகர் விக்ரமையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த படம் இரண்டாவது நாளான நேற்றும் கல்லா காட்டவில்லை. விடுமுறை தினத்தன்று இந்த படம் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
அஜய் ஞானமுத்து இயக்கம், AR ரஹ்மான் இசை, விக்ரமின் நடிப்பு என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் கோப்ரா படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு ஒரு நல்ல ஓப்பனிங் இருந்தது. அதனால் முதல் நாள் வசூல் இந்த படத்திற்கு 25 கோடியாக இருந்தது.
இந்த படத்திற்கு நேர்மறை, எதிர்மறை விமர்சனங்கள் என கலவையாக வந்தன. இந்த படத்தின் பெரிய மைனஸாக எல்லாரும் கூறியது படத்தின் நேரம் தான். இந்த படத்தின் மொத்த ரன்னிங் டைம் 3 மணி நேரம் என்பதை படக்குழு குறைக்க திட்டமிட்டது.
அதன்படி இந்த படத்தில் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. இந்த ட்ரிம் செய்யப்பட்ட நியூ வெர்சன் கோப்ரா நேற்று மாலை திரையிடப்பட்டது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு இந்த காட்சியும் வசூல் செய்யவில்லை. நேற்றைய மொத்த கலெக்சன் 14 கோடி மட்டுமே.
தமிழகத்தில் 9 கோடியும், இந்தியாவில் 2 கோடியும் , இந்தியா தவிர்த்து மற்ற இடங்களில் 3 கோடியும் வசூல் செய்தது. இது முதல்நாள் வசூலை விட ரொம்ப கம்மி. முதல் இரண்டு நாள் கலக்சனையும் சேர்த்து மொத்தம் 38 கோடி தான்.
கோப்ரா படம் விக்ரமும், அவருடைய ரசிகர்களும் 2 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்பார்த்து கொண்டிருந்த படம். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி ஆகும். ஆனால் பாக்ஸ் ஆபிசில் அந்த அளவுக்கு கலெக்சன் வருவதாக தெரியவில்லை. வீக் எண்டு நாட்களான சனி, ஞாயிறில் ஏதாவது முன்னேற்றம் வரலாம்.