நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதியுடன் ஆன வீடியோ வெளியாகி இருந்தது. அதில் ரஜினி கிட்டத்தட்ட 10 வயது குறைந்தது போல் காணப்பட்டார். ஜெயிலர் படம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்நிலையில் டாப் நடிகர்களின் படங்கள் வெளியாவதற்கு முன்பே வெளிமாநிலங்களில் வியாபாரம் ஆகும். அந்த வகையில் தளபதி விஜய்க்கு தான் ப்ரீ பிசினஸ் எப்போதுமே நன்றாக இருக்கும். ஆனால் இப்போது விக்ரம் வசூல் மற்றும் லியோ பிசினஸ் மொத்தத்தையும் ஜெயிலர் ப்ரீ பிசினஸ் அள்ளி உள்ளது.
அதாவது லோகேஷ் கனகராஜ் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்களை வைத்து விக்ரம் படத்தை எடுத்திருந்தார் இப்படம் கிட்டத்தட்ட 200 கோடி வசூல் செய்திருந்தது, இப்போது விஜய்யை வைத்து லியோ படத்தை எடுத்த வருகிறார். இந்த படத்தின் பிரீ பிசினஸ் 200 கோடி வியாபாரம் ஆகி உள்ளது.
இந்த சூழலில் ஜெயிலர் படம் வெளிநாட்டு வியாபாரம், ஆடியோ வியாபாரம் மற்றும் ஓடிடி போன்றவற்றை சேர்த்து 400 கோடி வரை வசூல் ஈட்டி உள்ளதாம். இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு நெல்சனின் ஜெயிலர் படம் ரிலீசுக்கு முன்பே அதிகமாக வசூல் செய்த படமாக உள்ளது.
மேலும் கேரளாவில் இப்படம் கிட்டத்தட்ட 7 கோடி வரை கேட்கப்பட்டு வருகிறதாம். ஜெயிலர் படத்தின் ட்ரைலர் கூட இன்னும் வெளியாகாத நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டு உள்ளது. அதுமட்டுமின்றி ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படமாக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீஸ்ட் படத்தின் விமர்சனத்தினால் நெல்சன் கேலி, கிண்டலுக்கு உள்ளானார். அவமானம் தான் ஒரு மனிதனின் உயர்வுக்கு காரணமாக இருக்கும் என்பது போல, தன்னை செதுக்கிக் கொண்டு இரவு பகல் பாராமல் ஜெயிலர் படத்திற்காக நெல்சன் உழைத்துள்ளார். அதற்கான பலனை நிச்சயம் அடைவார் என அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.