வருமனுக்கு 3 மடங்கு சம்பளத்தை வாரி வழங்கிய சன் பிக்சர்ஸ் மாறன்.. அவரே கூறிய சுவாரஸ்யம்

Jailer-Varuman: ஜெயிலர் படத்தில் ரஜினியை அடுத்து அதிக பெயரை தட்டி சென்றவர் நடிகர் விநாயகன். மலையாள நடிகரான இவர் தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம் ஜெயிலர். நெல்சன் இவரை சரியாக பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. அதில் தன்னை நடிப்பால் மிரள விட்டார் விநாயகன் என ரஜினியை பாராட்டி பேசி இருந்தார். அவ்வாறு ஜெயிலர் வருமன் கதாபாத்திரத்திற்கு இவர் தான் கச்சிதமாக பொருந்துவார் என்று தேடிப்பிடித்து நடிக்க வைத்திருந்தார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் விநாயகனின் சம்பளம் மிகவும் குறைவு என்று ஒரு செய்தி பரவிக் கொண்டிருந்தது. அதாவது இந்த படத்திற்கு அவர் வெறும் 35 லட்சம் மட்டுமே சம்பளமாக பெற்றிருந்தார் என்று கூறப்பட்டது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விநாயகன் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

அதாவது இந்த படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ஜெயிலர் படத்திற்காக தான் கேட்ட சம்பளத்தை விட அதிகமாக மூன்று மடங்கு கொடுத்தார் என்று கூறி இருக்கிறார். ஆகையால் ஜெயிலர் படத்திற்கு கண்டிப்பாக விநாயகன் கோடிகளில் சம்பளம் வாங்கி இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஏற்கனவே படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து வசூல் சாதனை படைத்த நிலையில் படக்குழுவுக்கு பரிசுகளை வழங்கி இருந்தார் கலாநிதி மாறன். அந்த வகையில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு மிக விலை உயர்ந்த பரிசுகளை கொடுத்திருந்தார். மேலும் ஜெயிலர் வெற்றிக்கு விநாயகம் முக்கியமான காரணம் ஆக இருந்துள்ளார்.

ஆகையால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் அடுத்தடுத்த படங்களில் கண்டிப்பாக இவர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஜெயிலர் வெற்றிக்குப் பிறகு விநாயகன் வீட்டு வாசலில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கியூவில் நின்று வருகிறார்கள்.