Actor karthi and vishnu vishal: எதார்த்தமான நடிப்புடன் பல போராட்டங்களை கடந்து தற்போது கதாநாயகனாக தனக்கான ஒரு இடத்தை பிடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார் விஷ்ணு விஷால். ஆரம்பத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் இவருடைய நடிப்புக்கும் திறமைக்கும் அங்கீகாரம் கிடைக்கும் விதமாக படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து அதனுடைய முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி இவர் நடித்த படங்களில் குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, சிலுக்குவார் பட்டி சிங்கம், ராட்சசன், கட்டா குஸ்தி போன்ற படங்கள் அனைத்தும் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
ஆனால் இவருடைய நடிப்பையும் திறமையும் பார்த்த வெண்ணிலா கபடி குழு படத்தின் இயக்குனர் சுசீந்திரன் அவர் இயக்க இருந்த அடுத்த படத்தையும் விஷ்ணு விஷாலை தான் நடிக்க வைப்பதாக இருந்தது. இந்த நேரத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் மற்றும் பையா திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சுசீந்திரனிடம் இந்த கதையை நான் பண்ணுகிறேன் என்று தானாகவே கேட்டு வாங்கி நடித்த படம் தான் நான் மகான் அல்ல. அதே நேரத்தில் கார்த்திக் பெரிய பின்னணியில் இருந்து வந்ததால் இயக்குனரும் இவரை வைத்து எடுத்தால் வசூல் அளவிலும் வெற்றி பார்க்கலாம் என்று விஷ்ணு விஷாலை தவிர்த்து விட்டு கார்த்தியை நடிக்க வைத்தார்.
ஒருவேளை நான் மகான் அல்ல படத்தில் கார்த்திக் பதிலாக விஷ்ணு விஷால் நடித்திருந்தால் இப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆகி முன்னணியில் வந்திருக்கலாம். ஆனால் சுசீந்திரன் கார்த்திக் வருவதற்கு முன்னதாகவே விஷ்ணு விஷால் இடம் என்னுடைய அடுத்த கதையில் நீதான் கதாநாயகன் என்ற வாக்குறுதியை கொடுத்திருந்தார்.
அவரும் அதே நம்பிக்கையில் காத்திருந்த பொழுது இவருக்கான படத்தை தந்திரமாக தட்டிப் பறித்து விட்டார் கார்த்தி. தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக பேரும் புகழையும் சம்பாதித்த கார்த்தியின் வெற்றிக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியம் இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இது சினிமாவில் சாதாரண விஷயமாக இருந்தாலும், விஷ்ணு விஷால் நடிக்க இருந்த படத்தை அபகரித்து விட்டார்.