பொங்கல் ரேசில் அயலான், கேப்டன் மில்லர் எது வெற்றிவாகை சூடியது.. குருநாதருடன் மல்லுக்கட்டிய சிஷ்யன்

Dhanush and Sivakarthikeyan: தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படமும் பொங்கல் பண்டிகையை ஒட்டி 12ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இந்த இரண்டு படங்களுக்குமே அதிக எதிர்பார்ப்பு வைக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ற மாதிரி இந்த இரண்டு படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆனால் இரண்டு படங்களுமே வெவ்வேறு கதை அம்சம் கொண்ட படங்கள். அதாவது தனுஷின், கேப்டன் மில்லர் படம் ஜாதிப் பிரச்சினையை மையமாக வைத்து ரத்தக்களரியான ஒரு ஆக்சன் படமாக இருக்கிறது. இதற்கு எதிர்மறாக சிவகார்த்திகேயனின் அயலான் படம் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் பார்த்து சந்தோசமாக நேரத்தை செலவிடும் ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கிறது.

அந்த வகையில் இருவருக்குமே அதிகமான ரசிகர்கள் இருப்பதால் ஒருத்தருக்கு ஒருத்தர் சலிச்சவங்க இல்ல என்பதற்கு ஏற்ப வசூலில் லாபத்தை பார்த்து வருகிறார்கள். அத்துடன் பொங்கலுக்கு வெளியான இந்த இரண்டு படங்களில் எந்த படம் அதிகமான வசூலை பெற்று யாருக்கு வெற்றிவாகை கிடைத்திருக்கிறது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

அதாவது எப்பொழுதுமே சீனியர் ஒரு படி மேலே தான் இருப்பார் என்பதை நிரூபிக்கும் விதமாக தனுஷின் கேப்டன் மில்லர் அதிக வசூலை பெற்றிருக்கிறது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 11 நாட்கள் கடந்த நிலையில் தற்போது வரை 90 கோடிக்கு மேல் அதிக வசூல் செய்து இந்த வருடத்தில் வசூல் சாதனை பெற்ற படங்களில் முதலிடத்தை பெற்றிருக்கிறது.

இதற்கு அடுத்தப்படியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அயலான் படம் தற்போது வரை 78 கோடிக்கும் மேல் வசூலை பெற்று வருகிறது. அந்த வகையில் தனக்கு சினிமாவை கற்றுக் கொடுத்து தூக்கிவிட்ட குருநாதருடன் மல்லுக்கட்டிய சிவகார்த்திகேயனின் அயலான் படம் வசூலில் இரண்டாவது இடத்தை அடைந்திருக்கிறது.

தற்போது படி பொங்கல் ரேசில் வெளிவந்த படங்களில் தனுசுக்கு வெற்றிவாகை கிடைத்திருக்கிறது. மேலும் இதனைத் தொடர்ந்து இந்த வாரம் விடுமுறை நான்கு நாட்கள் தொடர்ந்து இருப்பதால் இந்த வெற்றி ஏற்றம் இறக்கமாக அமையவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் இரு படங்களும் கூடிய விரைவில் 150 கோடி வசூலில் இணைகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.