சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஹீரோயினாக நடித்து கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவருக்கு 40 வயது ஆகிவிட்டது என சொன்னால் யாராலும் நம்ப முடியாது. அந்த அளவிற்கு இளமை மங்காமல் இருக்கிறார்.
ஆனால் திரிஷாவிற்கு திருமணம் எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு அவருடைய அம்மா சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். நடிகை திரிஷாவிற்கு தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
ஆனால் திருமணம் நின்று போனது. இதற்கு காரணம் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியாத புதிராகவே இருந்தது. ஆனால் இப்போது திரிஷாவின் அம்மா அதை உடைத்து கூறி இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு திரிஷா சினிமாவில் நடிக்கக்கூடாது என்று வருண் மணியன் கூறியதால் திருமணம் நின்று விட்டதாக அப்போது சொல்லப்பட்டது. ஆனால் திருமணம் ஏன் நின்றது என எங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும்.
திரிஷா படங்களில் நடிப்பது தெரிந்து தான் பெண் பார்த்தார்கள், நிச்சயமும் செய்தார்கள். அதேபோல் திரிஷா தொடர்ந்து நடிக்க வேண்டும் என வருண் மணியனும் ஊக்குவித்தார். அப்படி இருக்கும்போது திருமணம் எதற்காக நின்று போனதற்கான உண்மையான காரணம் எங்களுக்கு தான் தெரியும். அதைப்பற்றி எதுவும் தெரியாத பத்திரிகையாளர்கள் நிறையவே எழுதி விட்டனர்.
திரிஷாவின் திருமணம் நின்று போனதற்கு பல பெரியவர்களும் தொடர்பு உண்டு. ஒத்து வராத விஷயங்களை சமரசம் செய்வதில் நியாயம் இல்லை. திருமணம் ஆக வேண்டிய இருவருக்குள் ஒத்துவரவில்லை என்றால் பிரிவது தான் சரி என்று மணமக்களுக்கு இடையே ஏற்பட்ட மன கசப்பை திரிஷாவின் அம்மா உடைத்துச் சொன்னார்
தற்போது திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். முதல் பாகத்தில் பேரழகியாக திரிஷாவை பார்த்த ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகத்திலும் அவருடைய பார்ப்பதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரிஷாவிடம் ரசிகர்கள் எப்போது திருமணம் என்று கேட்டு வருகிறார்கள். அதற்கு பதில் அளித்த அவர் ரசிகர்களின் பக்கம் கை நீட்டி, ‘உயிர் அவர்களுடையது, அப்படியே இருந்து விட்டு போகட்டும்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார். இதன் மூலம் திரிஷா இன்னும் தன்னுடைய திருமணத்தைப் பற்றி எந்த வித முடிவும் எடுக்காமல் தான் இப்போது வரையும் இருக்கிறார் என்பது புலப்படுகிறது.